புதுப்பித்தல் Updation
Updated: Dec 5, 2022
By Venkateshwaran M
அறிவே அறிவே புதுப்பித்துக்கொள்
பழையன கழித்து புதுப்பித்துக்கொள்
அறவே அறவே ஒதுக்காமல்
கருவை மட்டும் காத்துக்கொள்
மருத்துவ புதுமையை ஏற்றுக்கொள்
அது சேவை என்பதை ஏற்றிக்கொள்
கணினியின் நுட்பத்தை பழகிச்செய்
பிற தேசத்தை நம் பக்கம் திரும்பச்செய்
அன்று தொலைபேசிக்கடை வைத்திருந்தோன்
இன்று தொலைந்து போனதை அறியாயோ ?
தொடுதிரை கருவிக்கு திரும்பியவன்
காணும் வளர்ச்சியை மிகையாயோ?
மக்கள் தேவைக்கும், சேவைக்கும் ஏற்றார்போல்
தொழில் கேட்கும் ஆயிரம் மாற்றங்களே!
பின் வரும் தேவையை முன் அறிவார்
காணுவார் வாழ்வில் ஏற்றங்களே!
கைபேசியில் செயலி கேட்கிறதே,
நாள்தோறும் தன்னை புதுப்பிக்க
இறை தந்த மூளை கேட்காதோ
நாள்தோறும் தன்னை புதுப்பிக்க?
அறிவே அறிவே புதுப்பித்துக்கொள்
கால வெள்ளத்திலே உன்னை காத்துக்கொள்
English translation
Updation
Oh, my dear Brain, keep on update
Throw the rotten knowledge and update
Don’t discard the entire old knowledge
Keep the core knowledge in all the profession
Accept the innovation in the medical field
Keep in mind that it is a service
Familiarize yourself with computer technology
Make other nations look back to us
That day a man had telephone booths and recharge shops
Don’t you know he has vanished today?
A man who has turned to the touch screen devices
Don’t you amaze his growth?
According to people's need and service
The industry asks for thousand changes!
Those who Foreknows the next need
Sees growth in their life
Mobile phone’s app is asking for
Updation regularly
Don’t God’s gifted brain ask for
Updation regularly?
Oh, my dear Brain, keep on update and save yourself
We are already running out of time
By Venkateshwaran M

Comments