பாட்டி
- Hashtag Kalakar
- May 9, 2023
- 2 min read
By Dinesh Elumalai
Tamil Version: - பாட்டி
பேரக் குழந்தைகள் என்றால் பேரின்பம் தான்!!சேர செய்திடுவார், சேட்டைகள் நித்தமும் தான்!!தள்ளாத கிழ பருவம் அடைந்தேன் நான்!!தாயாக இருந்த என்னை பாட்டியாக மாறவைத்தார்,நித்தமும் வலிதரும் ஓய்ந்த கால்கள் எனக்கு!உறங்குவாயெனில் ஓயாமல், ஆடும் தொட்டில் உனக்கு!!மணவறை ஏற கூரைப்புடவை தந்தனரே – மகள் அவள் உடுத்தி பழகிட கேட்டனர்ஆயிரம் புடவைகள் அவளுக்குத் தந்தேன் நான்!?ஆயினும் எந்தன் மனசேலை தர மட்டும் மனமில்லை?!மகளுக்கோ கோவம் தான் என் மேலே – காரணம்??மகப்பேறு முடிந்து அவள் வீட்டுக்கு வருகையிலே,வீடு முட்டத்திலே தூளியாக தொங்கியதே!!மனசேலை பேத்திக்கு மட்டும்!!?தலை நிற்கும் நேரம் வரை உடனிருந்தாய் –தவழும் நேரம் வந்தவுடன் தகப்பனுடன் சென்றாய்!!வாசல் திறந்திருக்க முட்டத்திலே தூளி தொங்கியிருக்க!!அவிழ்க்க மனம் இல்லை விரைவில் நீ வருவாயென!!?ஈன்றபொழுதில் நான் எண்ணவில்லை என் மகள் – இப்படியொரு இன்பம் என் வாழ்வில் தருவாள் என்று!!அகழ்வாய் நீ திறந்து அம்மம்மா எனும் நேரம்,அப்பப்பா என்ன சுகம் என்ன சுகம் – இப்பொழுதே!!என் செவிகள் இரண்டும் செவிடாய் போனாலும் கவலை இல்லை!!?
English Translation : - Grand Mother
Grandkids are always a source of happiness,
Grandkids are always notorious,
These kids Promote me from being a mother to a grandmother,
As I age and become a granny,
As my knees lose their strength,
Still rocking your cradle to watch you sleep,
My daughter is eyeing my wedding saree to drape it for her big day,
Though I turned her down
She is now angry seeing my wedding saree being hung as my grandkids cradle.
I love to see my daughter growing a little furious about this.
I enjoyed my stay with my grandchildren.
And as days passed by and my little grandchild started crawling,
My daughter planned to leave me so as to stay with her family,
Now that the house is very empty and noiseless,
Still, my heart doesn't allow me to remove the cradle that is still hanging.
Every day I long for my grandchildren to return and call me - Hey Grandma,
Oh! How lovely is that moment that I will cherish forever!
By Dinesh Elumalai

Comments