நிலவோ அவள்
By Sasikumar K
தென்னங்கீற்றுக்களிடையில் காட்சியளிக்கும் நிலவாக முகத்திரையின் மறைவில் உதித்ததே அவள் முகம்! அவள் இரு விழிகளும் கீதம் பாடும், ஒளிர்ந்து அழகு சேர்க்கும் மின்மினிப்பூச்சியாய்! மூன்றாம் பிறை நிலவாக என்னில் தென்றல் வீசுமே அவள் குறுஞ்சிகையும்!
ஓவியம் தீட்டும் பால்வண்ண நிலவைத்தீண்ட மேகமாய் உருமாறியது அவன் இதயமும்! மழையாய் உருகியது நிலவின் சுடர் ஒளியால் கருமேகமாகிய அந்த இதயம்! நிலவின் சம்மதமும் கிட்டுமோ ? துணைக்கோளாக பால்வெளியில் வலம்வர!!
By Sasikumar K

Comments