தெருவோர எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய எழுத்து மதிப்புமிக்கது.
By Muthukumaran P
நான் ஒரு தெரு எழுத்தாளன் தான் ஆனால் உன்னதமான கருத்துக்களை மனிதர்கள் வாழ்வில் தெளிவு ஏற்படும் விதத்தில் சொல்பவன். நான் ஒரு தெரு எழுத்தாளன் தான் ஆனால் எழுத்துக்களுக்கு உணர்வுகள் உண்டு என்பதை உணர்த்தும் உன்னத எழுத்தாளன். நான் ஒரு தெரு எழுத்தாளன் தான் என்னிடம் வசதிவாய்ப்புகள் இல்லை ஆனால் சுதந்திரமாக என் மனதில் பட்டதை எழுதும் திறமை உள்ளது என் எழுத்தில் பலர் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்கள் கொட்டிக்கிடக்கிறது.
நான் ஒரு தெரு எழுத்தாளன் தான் என் வறுமையும் ,பசியும் என் உடலை வாட்டும் ஒருபோதும் என் எழுத்தை வாட்ட முடியாது எப்போதும் சிறப்புடன் வெளிப்படும் சுயநலம் இன்றி பொதுநலத்துடன். நான் ஒரு தெரு எழுத்தாளன்தான் ஆனால் என் எழுத்தை தெருக்களை மனிதர்கள் பயன்படுத்துவது போன்று உங்கள் வாழ்வில் தெளிவு பெற என் எழுத்தை பின்பற்றலாம் என் எழுத்துக்கு எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது எப்பொழுது தெருக்கள் போன்று உதவத்தயங்காதது.
நான் ஒரு தெரு எழுத்தாளன்தான் ஆனால் என் எழுத்துக்கள் தூய்மையான கருத்துக்களை தெருக்கள் போன்று ஓய்வே இன்றி தொடர்ந்து உங்களுக்கு உதவக்கூடியது எந்தவித பிரதிபலனும் பார்க்காமல். சாதாரண தெரு எழுத்தாளனாக இருந்தாலும் அவன் எழுத்துக்கள் தெருக்கள் போன்று தூய்மையாக இயற்கை உணர்வுகளோடு இருந்தால் அப்படிப்பட்ட எழுத்துக்கள் என்றும் அழிவின்றி போற்றி பாதுகாக்க வேண்டும். என் தங்க தேராக இருந்தாலும் ஆடிக்காராக இருந்தாலும் சாதாரண தெருக்களில் தான் ஓட வேண்டும். தெருக்கள் இல்லை என்றால் அவைகளுக்கு வாழ்க்கை கிடையாது.அது போன்றது
தான் சாதாரண தெரு எழுத்தாளனின் எழுதும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சாதாரண தெருக்களுக்கு உயிர் இயற்கை சாதாரண எழுத்தாளனுக்கு உற்ற நண்பன் இயற்கை சிந்தனையும் அதன்வழி வரும் எழுத்துக்கு உயிர் கொடுக்கும் பேனாவும்,எழுத்தை சுமக்கும் பேப்பரும் .
English Translation of the First Poem
(Even if he is a street writer, his writing is still valuable..
I am a street writer But he speaks noble ideas in such a way that people get clarity in their lives. I am a street writer But writing has feelings A great writer who realizes that there is.
I am a street writer I have no facilities But I have the ability to write freely what comes to my mind and in my writing there are many good ideas that are necessary for life. I am a street writer My poverty, hunger and my body can never wither my writing, always with the common good without the selfishness that emerges with specialness.
I am a street writer But you can follow my writing to gain clarity in your life just like people use the streets. My writing has no expectations. I am a street writer But my writings are pure ideas that can help you without resting like the streets without seeing any repercussions.
Even if he is an ordinary street writer, if his writings are as pure as the streets and with natural feelings, such writings should be cherished and protected forever. Even with a golden chariot and audi car, it should run on ordinary streets. If there are no streets, they have no life. Don't forget that the writing of an ordinary street writer is like that.
Life for ordinary streets Nature is the writer's best friend Nature thought and the pen that gives life to the writing that comes through it.)
By Muthukumaran P

Comments