தேநீர்
By Sasikumar K
மலைகளின் குறுக்கு வெட்டுத்தோற்றமாய் விளைந்து, கண்ணாடிக் கோப்பையில் துளித்தேனாய் சுவைக்கும் அமுதே! கதகதப்பான கனலில் உட்கொள்ளும் வேளையில், சுவை மொட்டுக்களும் உயிர்த்தெழுந்து உள் நாவை நாட்டியமாடச் செய்யுமே! பணிச்சுமையால் பலியாகும் உயிர்களுக்கும் பசியால் வாடும் வறியவர்க்கும் உயிரூட்டும் உற்சாக பானமே!
கொளுத்தும் கோடையிலும் கொட்டும் மழையிலும் நீயாகிப்போக , உன்னில் அடிமையான மனங்கள் ஏராளம் இங்கு! உன்னுடன் கழித்த என்னிரவு உலாக்களும் நீங்காமல் நெஞ்சில் இனிக்கும் தள்ளாடும் வயதிலும்! காலங்கள் கடந்தாலும், மாற்றங்கள் நேர்ந்தாலும், உன்னுடன் நீளுமே என் கவிதைத்தாளும்!!
By Sasikumar K

Comments