சபலத்தில் சிக்கிய சாமானியன்
By Sarathkumar Rajendiran
நெஞ்சில் ஓர் வலி…
நிம்மதியை தொலைத்து விட்டு
நஞ்சில் மூழ்கி நறுமணம் இழந்து
என் மதி கெட்டு
தன்னிச்சையாய் எடுத்த முடிவே
தவறென அறியாமல்
என் இச்சையால், இன்பம் காண
எதுமறியா மடந்தை
என்றும் பாராமல் -அதன்
மலர்தன்மை பறித்து
மன்னிப்பில்லா பாவம் செய்து விட்டேன்…!
இறப்பினும்…,
இந்நினைவே கொடுமையானது..!
மறக்க முடியாமல் தவிக்கிறேன்…,
காதுக்குள் இரைச்சலாய்
அவளின் கதறல் சத்தம்…!
கண்ணுக்குள் நிற்கிறது
அவளின் காயம் பட்ட மேனி…!
கறைபடிந்து மறையாமல் கிடக்கிறது
அவளின் உதிரம் பட்ட என் அங்கங்கள்..
அன்று மதிகெட்டு செய்துவிட்டேன்…!
ஆனால் இன்றோ….
பூபெய்த என் புதுப்பெண்ணே – உன்
பூமுகம் கண்டேன்…!
உன் நெற்றியின் குங்குமமோ
அவளின் குருதி என தோன்றுதே…!
வெட்கத்தில் சிவந்த உன் கன்னங்களோ
வேதனை சுமந்த அவளின்
கன்னிப்போன கன்னங்கள் என தோன்றுதே ..!
மலர்சூடிய உந்தன் கூந்தலோ
அவளின் தலைவிறி கோலமென தோன்றுதே..!
கரு மையால் கலங்கிய உன் கண்களோ
கவலையால் வழிந்த அவளின் கண்ணீரென தோன்றுதே…!
மதி அழகியாய் உந்தன் மேனியே
வியர்வையால் குளித்த அவளின் தேகமென தோன்றுதே…!
ஒளி வீசும் உந்தன் பார்வையோ -இன்று
சுட்டெரிக்கும் சூரியனாய் தோன்றுதே..!
அந்த தீப சுடரில் தினம் தினம்
தீ பற்றி அழிவதா…என் தண்டனை..?
அதனினும் மரணம் சுகமானதே….!
By Sarathkumar Rajendiran

Comments