top of page

சச்சின்

May 9, 2023
2 min read

By Dinesh Elumalai


24 இல் பிறந்தவனே

22 கெஜம் இடைவெளியில் கிரிக்கெட்டை ஆண்டவனே

எதிரிகள் கூடாரத்தில் உனக்கு மதிப்பு உண்டு

உனக்களித்ததனால் விருதுக்கும் இங்குச் சிறப்பு உண்டு

சதங்களின் நாயகனே சரித்திரத்தில் சூரியனே

அமைதியில் சந்திரனே அஞ்சலியின் சுந்தரனே

முதல் போட்டியில் மூக்குடைத்தனரே

பால்மாறா பிஞ்சு இவனென்று நகைத்தனரே

ஐந்தரை அடிதான் அவன் உருவம்

ஆட்டத்தில் தெரியும் இவன் சொரூபம்

எட்டாக்கனி என்றும் எட்டி நின்று பார்த்தனர்

எட்டுவைத்து நீ அடித்தாய் இங்கு 200 எளிது என்றனர்

சர்ச்சையில் என்றும் சிக்காதவன்

சார் விவ் ரிச்சர்டிற்கு நிகரானவன்

ஓட்டங்களில் மட்டுமா உந்தன் சாதனை

பிறரை கூடாரம் நோக்கி ஓடவைத்ததிலும்

உந்தன் சாதனை அடங்கும்

பயிற்சிக்கு என்றும் நீ காலம் தாழ்ந்து வந்ததில்லை

உன் முயற்சிக்கு உலகக்கோப்பை சற்று தாமதமாகவே வந்தது ஏனோ

அடித்து ஆடி அரை சதம் என நீ கடந்தாலும்

அடுத்த பந்தே நீ ஆட்டம் இழந்து போனாலும்

ஆட்டநாயகன் என்றும் நீயே,

இந்த விளையாட்டின் நாயகனும் நீயே

மானுடர் மத்தியில் மட்டைப்பந்தினை மதமாய் மாற்றினை

ஆத்திகரும் வணங்கும் மானிட கடவுளும் ஆனாய்

சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்

சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்

எனும் நான்கெழுத்து மந்திரம் எங்கள் நாவினில் ஜனித்திடும்

அடித்திடும் ஒவ்வொரு பந்திற்கும் அரங்கமே மகிழ்ந்திடும்

ஆட்டம் நீ இழந்தால் அமைதியாய் தொலைக்காட்சிகள் முடங்கும்

இறுதி ஆட்டத்தில் உன் கேட்ச் பிடித்தபின் கலங்கா கண்கள் இல்லை

அதில் டேரன் (சாமி) உம் அடங்கும்

உந்தன் புகழ் பாட எதிரியும் விரும்புவர்

மீண்டும் நீ ஆட ஆண்டவனே ஏங்குவார்

உனக்கு நிகர் என்றும் நீ அல்லவா

எங்கள் மனதினில் என்றும் நீயே மன்னவா!!!





English Translation: - Sachin


The one who is born on the 24th,

The one who ruled the cricket in the pitch of 22 yards,

The one who has gained momentum even with his competitor,

The award becomes super special when you have it in your hands,

The one who is the Lord of the Century's

Yet very silent and a lovable one for all,

Remained silent when the opponent hit your nose

And mocked you down, making remarks on your physique,

But you proved your potential during the match/play,

And made your opponent’s feel jealous about you,

With your master blaster performance,

The one who was never trapped in conspiracies,

The one who was treated on par with Sir Viv Richards,

You have been a game-changer in all your matches.

Making the opponent run back to the pavilion,

Being very punctual in your practice sessions,

I'm not sure why the World Cup we received was delayed.

Thou you might get out at a half century,

For us, you will be the Player of the match always,

For India, Cricket is the Religion, and you are the God.

Every time you play the match and for every ball that you face,

We shout Sachin Sachin., Sachin., Sachin., Sachin.,

For every straight drive shot from you,

Throws shouts of joy among the spectators,

If you are announced Out in any match, we sadly turn OFF the TV.

No one likes to see you getting out,

That even made your opponent, Daren Sammy, cry after catching the last ball.

Which shows how much your opponent’s love and respect you,

Even God loves you to rule the pitch again.

As no one can replace you,

You will stay in our hearts forever!!



By Dinesh Elumalai





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page