சொல்லிவிட்டு செல்
By Jeevitha S (ஜீவந்த் )
நீ
என் வானில் வலம்வரும் மேகக்கூட்டமா
மறைந்து போகும் பனி மூட்டமா ?
நீ
என் பாலைவனத்தில் கண்டெடுத்த ஊற்றுநீரா
காணாமல் போகும் கானல்நீரா ?
நீ
என் இரவை பிரகாசிக்கும் நிலவின் ஒளியா
மாயமாய் போகும் மின்னல் ஒளியா ?
நீ
என் உயிர் தாங்கும் தாமரை இலையா
உறிஞ்சி கொல்லும் கள்ளிச் செடியா ?
நீ
என் பாதையில் வந்த வழிகாட்டியா
மாறி போகும் திசைகாட்டியா ?
நீ
என் கடற்கரையின் களங்கரை விளக்கா
அனைந்து போகும் அகல் விளக்கா ?
சொல்லிவிட்டு செல்
விடை தெரியாமல் வினவுகிறேன்
சொல்லிவிட்டு செல்
வழி தெரியாமல் விழிக்கிறேன் !
By Jeevitha S (ஜீவந்த் )

Comments