top of page

சுதந்திரம் - By Rusjanthi Piratheepan

Aug 15
4 min read

Written By: Rusjanthi Piratheepan

Category: Short story

Competition: Global Poetry and Creative Writing Competition 2026

In the vibrant tapestry of the Global Poetry and Creative Writing Competition 2026, Rusjanthi Piratheepan offers a compelling narrative titled "சுதந்திரம்." As a part of the Short Story category, Rusjanthi, who writes under the name சுதந்திரம், delves into the themes of freedom and self-discovery. This narrative invites readers into a world where the pursuit of dreams against societal constraints is explored with elegance and depth.

About the Work

"சுதந்திரம்" is an evocative short story that revolves around themes of freedom and the struggle to achieve one's dreams amidst constraints. Through vivid imagery and poignant storytelling, Rusjanthi Piratheepan crafts a narrative that highlights the resilience and determination of its protagonist, Vaanmathi. The story is rich with cultural nuances and engages the reader with its exploration of personal empowerment and the courage to break free from traditional boundaries.

சுதந்திரம்

Original Submission by Rusjanthi Piratheepan

சுதந்திரம்

அவள் பெயர் வான்மதி. மனதிற்கு அமைதியை தரும் வகையில் அழகிய பசுமைச்சூழல் நிறைந்த சிறிய கிராமத்தில் வாழ்ந்து வரும் சிறுமி அவள்.தந்தை , தாய்,தம்பி என உறவுகளுக்கு சொந்தக்காரி. அந்தக்குடும்பத்தில் அவள் சற்றே தனித்துத் தெரியக்கூடியவளாக சிறுவயதிலிருந்தே திகழ்ந்தாள். வயதிற்கேற்றாற் போல சுட்டித்தனமும் பெயருக்கேற்றாற் போல அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வமும் சற்றே அதிகம். தன் மனதில் தோன்றும் கேள்விகளை தான் சார்ந்தவர்களை கேட்டு அறிந்து கொள்வாள். எதற்கும் பயந்து நின்று பார்க்கவே முடியாது. தைரியமும் விவேகமும் அவள் பிறப்பிலிருந்தே வந்தது . வான்மதி கல்வியிலும் அறிவாற்றல் மிகுந்தவள். அவளது பள்ளிப்பருவத்தில் கல்விச்செயற்பாடுகளில் ஆர்வமுடையவளாய் திகழ்ந்தாள். அன்று அதிகாலைப்பொழுது எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்து பாடங்களை படிப்பது அவளது வழக்கம். சூரியனின் வருகையால் கிராமச்சூழல் பேரழகாக காட்சியளித்தது.அவளுக்கும் அந்த பேரழகுக்கும் நெருங்கிய ஈடுபாடு.சூரியனின் உதயம் இருளை அகற்றி புதிய நாளுக்கான தொடக்கமாய் கதிரவன் ஒளி பரப்பி ஊரே வெளிச்சாகும். பறவைகளின் இசையில் நிரம்பி இருக்கும் காட்சி என அனைத்தையும் ரசித்தபடி அமைதியாய் மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள். நாளின் தொடக்கத்தின் புத்துணர்ச்சிக்காய் அவளுக்கான தேநீர் கோப்பையுடன் அருகில் வந்தமர்ந்தாள் அவளது தாய் ஆனந்தி .அண்ணார்ந்து வானை பார்த்தபடியே வான்மதி கேட்டாள் ‘’ அம்மா இந்தப்பறவைகள் எல்லாம் யாருடைய கட்டுப்பாடுகளுக்குள்ளும் இல்லாமல் சுதந்திரமாக பறந்து திரிகிறது . நானும் இந்த பறவைகளைப்போல சுதந்திரமாக பறந்து திரிய வேண்டும் என்றாள் .’’அவளது எண்ணங்களையும் ஆசைகளையும் கூறிய போது சராசரியாக எல்லோரைப்போலவும் ஆனந்தியும் நாங்கள் மானிடர்கள் அதிலும் நாங்கள் பெண்கள் . பெண் என்றால் அவளுக்கென்று ஒரு வரண்முறை ,கட்டுப்பாடுகள் இருக்கின்றன . அதை பின்பற்றியே வாழப்பழக வேண்டும் என்று கூறியபடியே எழுந்து பள்ளிக்கு தயாராகு வான்மதி என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள். அவளுக்கோ தாய் கூறியதில் சற்றும் உடன்பாடே இல்லை .அவளுக்குள் தாய் சொன்னதிற்கு எதிரான கருத்துக்கள் எழுந்த போதிலும் அதை வெளிப்படுத்தவில்லை. நாட்களின் நகர்வோட்டத்தில் வான்மதியும் தன்னுடைய பள்ளிப்பருவத்தை கடந்தாள். கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று மேற்படிப்பை தொடர்ந்தாள்.

கிராமப்புறத்தில் நடுத்தரகுடும்பத்தில் வளர்ந்தவளான இவள் தன்னுடைய திறமையாலும் ஆர்வத்தினாலும் கல்வியில் சிறந்து விளங்கிய அவளுக்கு என்று ஒரு கனவு இருந்தது . கனவை நனவாக்க வேண்டும் என்ற பயணத்தில் பல தடைகளையும் எதிர்ப்புக்களையும் கடக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டாள் வான்மதி. அவளுடைய கனவை நோக்கிய பயணத்திற்கு முதலில் அவளது குடும்பமே தடைகளை விதித்தது . வான்மதியின் தந்தை சேகர் கட்டுப்பாடுகள் வகுத்து சுதந்திரம் பெண்களுக்கு இல்லை என கூறுமளவிற்கு கடுமையானவர். இவர்களின் கருத்துக்கள் எவற்றிற்குமே அவள் உடன்படவில்லை. தன் கனவுக்காக எத்தகைய தடைகளையும் தகர்த்தெறியும் தைரியத்தை வளர்த்துக்கொண்டாள். நமக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை அடைவதற்கு நாமே தான் போராட வேண்டும் என்று தனக்குள்ளேயே வார்த்தைகளை கொண்டு வலிமையே வளர்த்தாள். தன் தாய், தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க தெரிந்தவள். ஆதலால் மனதில் தோன்றிய எண்ணங்களை தெளிவாக பெற்றோர்களுக்கு எடுத்து கூறினாள். தான் வெளியூர் சென்று மேற்படிப்பை தொடர இருப்பதையும் அதன் மூலம் கிடைக்கப்பெறக்கூடிய நன்மைகளையும் எடுத்துரைத்தாள். என்றைக்கும் விதிவிலக்கில்லாமல் தந்தையின் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாய் ஆனந்தி அவளுக்கு சற்று உறுதுணையாக இருந்தாள். ‘ உனக்கான வாய்ப்புக்களை நீயே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் , உன் கனவுகளை நோக்கி பயணித்தாக வேண்டும்.’ என்ற தாயின் நம்பிக்கை வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக இருந்தது அன்று இரவு. அடுத்த நாள் அவள் நினைத்தது போலவே தந்தையின் அனுமதியை பெற்றுக் கொடுத்தாள் ஆனந்தி.

வான்மதியும் புறப்பட்டு வெளியூர் சென்று தன் கனவை நோக்கி பயணிக்க தொடங்கினாள். மிக நன்றாகவே படித்து நன்நிலையையும் அடைந்தாள். பெண்கள் கல்வி கற்க வேண்டும் ,ஆணுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போலத்தான் பெண்களிற்கும் முக்கியம் என்பதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் வளர்ந்தாள் . வான்மதிக்கு தன்னுடைய மனதில் எழும் வார்த்தைகளை எந்தவொரு தயக்கமும் தடைகளும் இன்றி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாள். தன்மேல் கொண்ட நம்பிக்கையால் தன் குரலைக்கொண்டு தன்னைப்போல் எல்லோரையும் தைரியமானவர்களாகவும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் இடங்களில் எதிர்த்து நிற்கும் தன்னம்பிக்கையையும் எல்லோர் மத்தியிலும் கொண்டு வர வேண்டும் என்ற தன்னுடைய கனவை வானொலி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தன் குரலால் எல்லோரிடமும் கொண்டு சேர்த்தாள். அத்துடன் நிறைய புத்தகங்களை எழுத தொடங்கினாள். அவளது குரலும் எழுத்துக்களும் பெரும் மாற்றத்தை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்திக் கொடுத்தது.அவள் வளர்ந்த கிராமத்திலும் அவள் குரல் ஒலிக்கவே அவளைப்போன்று பல பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்க வெளிவந்தார்கள் .

அவளது கனவை நோக்கிய பயணத்தில் அன்று மிகச்சிறந்த நாள் . ‘சுதந்திரம் ’ பற்றி பேசுவதற்கு வானொலி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அவளுக்கு . ‘ ஒரு சிறிய பறவையை கூட்டில் அடைத்து வைத்து பார்ப்பதில் இல்லை சுதந்திரம். அதன் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும் . சுதந்திரம் வேண்டும் என்பதற்காக பூட்டிய கதவை உடைக்க வேண்டியதில்லை. அந்த கதவை திறந்து வைக்க யாரும் தடையிடக்கூடாது என்பதில் தான் சுதந்திரம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனிற்கும் தான் விரும்பிய ஒன்றை செய்வதில் முழுச் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரம் வீட்டின் கதவுகளில் இருந்து திறக்கப்பட வேண்டும். நமக்களிக்கப்படும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே சுதந்திரம் என்று தன் குரலை அனைவர் மனதிலும் பதியச்செய்தாள் வான்மதி.

‘ திறக்கப்படும் கதவுகளில் இருந்து பறப்போம் பறவைகளைப் போல

மீண்டும் வந்து அமர்வோம் சுதந்திரமாக ...’

About the Competition

The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar celebrates the diverse voices and imaginative expressions of writers across the globe. It is a platform that encourages creativity and artistic exploration, providing writers with the opportunity to share their unique perspectives and stories with a worldwide audience.

We extend our heartfelt gratitude to Rusjanthi Piratheepan for her participation in the Global Poetry and Creative Writing Competition 2026. Her short story "சுதந்திரம்" is a powerful depiction of the quest for freedom and self-realization. We look forward to seeing more inspiring works from her in the future.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page