சிசுவின் வேண்டுதலும் தாயின் தவிப்பும்
By Sarathkumar Rajendiran
அன்புள்ள அம்மா….
அனுமதி கேட்டு விண்ணப்பம் விடுகிறேன்
அழகான உலகில் அடியெடுத்து வைக்க.!
அன்பின் வெளிச்சத்தினால் – உன்
அறவணைப்பு வேண்டும்…
கண்ணுறங்கி காலம் கழிக்க -உன்
கதக்கதப்பு வேண்டும்…
பசித்த வயிற்றிக்கு பால் வார்க்க -உன்
மார்புகள் வேண்டும்…
இதம் கொண்டு மகிழ- உன்
இதழ்களின் முத்தம் வேண்டும்…
அனுமதி கிடைக்குமா எனக்கு…
அம்மா உந்தன் பதில் நோக்கி
காத்திக்கிடக்கிறேன்….
அனுமதி கேட்டு விண்ணப்பமா…?
அன்பே.. உன்னை அறவணைக்க
என்னிடம் அன்பின் வெளிச்சமில்லை
வெறுப்பின் இருளில் மாட்டிக்கொண்டு
வெளிவராமல் தவிக்கிறேன்…
கண்ணே…கண்ணுறங்கி காலம் கழிக்க -என்
கதக்கதப்பு வேண்டுமென்றாய்…
காம தீயினால் எறிக்கப்பட்ட என் உடலில்
கதக்கதப்பு இல்லை.. ஆனால்
காயங்கள் ஏராளம்….!
கழுகின் இறையான என்னால்
உன் பசி தீர்க்க இயலுமா..?
அழகான உலகம் இன்று
அசிங்கதால் வறண்டு கிடக்கிறது…
சுவாசம் கூட விஷமென மாறும் இவ்வுலகில்
நாம் வாசம் கொள்ள வேண்டுமா….?
என்னை மன்னித்துவிடு…!
By Sarathkumar Rajendiran

Comments