கள்வர்களால் கற்பழிக்கப்பட்டேன்
By Sarathkumar Rajendiran
கரைதோடும் கண்ணீரின் விலை
தெரியாமல் தவித்த மனதோடு
தாகம்தீர்க்க மட்டுமா நான் படைக்கப்பட்டேன்?
ஆண்மையின் இலக்கணம் அறியா
அறக்கர்களிடையே அடைப்பட்டு கிடக்கிறேன்
ஓர் அன்றில் பறவையாய் -அதன்
இலக்கே இன்று விடுதலை என்று
மாறியது ஏன்..?
நெற்றியில் திலகமிட்ட கணவன் முன்னே
கறைபடிந்து கண்ணீரில் சுத்தம் செய்கிறேன்…!
நிறைமாதம் என்றும் பார்க்காமல்- என்
நிர்வாணத்தை பார்க்கிறார்கள்…!
தன்னிலை மறந்தவனே சற்று
என் நிலை பாராட…!
அந்நிலை பார்த்தா உன்
ஆண்மையின் உயிர் நீர் உதிர்கிறது…?
உடைதோடும் என் உதிரம் தெரியவில்லையா?
மண்ணில் பாயும் என் குருதியின் சாயம் உலர்வதற்குள்
உன் சாயம் வெளுக்காதா…?
வேதனையில் உயிர் மடிகிறேன்…
உண்மை உயிர்கொண்டு
உன்உயிர்கொல்லும்….!
By Sarathkumar Rajendiran

Comments