கலப்பினம்
By Sarathkumar Rajendiran
ஆண்னென்ன பெண்னென்ன…
அதிலும் சரிப்பாதி நான்..!
சரிசெய்ய இயலா பிழையாகி போனேன்
சற்றும் எதிர்பாராமல்...!
ஏளனமான பேச்சு ஒருபுறம்
எடுதெறிந்து பேசும் வார்த்தை ஒரு புறம்
அழுதபோது கொஞ்சிய தாயும் – என்னை
அறுவருப்போடு பார்க்கிறாள்..!
உணர்வுகளில் மாற்றம்
உடலிலும் மாற்றம்
மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகில்
என் மாற்றம் மட்டும் ஏற்கப்படா
காரணம் என்ன..?
உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல்
வசைபாடும் இவ்வுலகில்…
கருப்பை சுமக்காத தாய்மையும்
கூடிக்கலவாத ஆண்மையும்
கலந்து பிறந்த இடையின
எழுத்து பிழைதான் நான்…!
களையாய் நினைத்து
களைந்து விடாதீர்கள்..!
மாற்று பயிராய் எங்களை
செழிக்கவிடுங்கள்….!
By Sarathkumar Rajendiran

Comments