top of page

கணிதப்பெண்

Jan 6, 2023
1 min read

By Muthu M


கோளமான உலகினில்

குவிந்த எண் வீரத்தில்

விளைந்த கணிதப் பெண்ணே!


இன்மொழி ஈன்ற இம்மகன்

அன்மொழி கலப்பால் அவிழ்க்கும்

என்மொழி எழுத்தைக் கேட்பயோ?


வட்டமான என் விழியில்

வாட்டமாக நீ விழ

வாடிய என் மனம்

வார்த்தையால் நீ அறிய

வார்த்தெடுத்த வரிகள் இதோ!


என்றுன்னை கண்டேனோ?

அன்றென்றன் மாறி மனம்

என்றென்றும் மாறிலி ஆகிற்றே


Arc segment நெற்றி

Origin பொட்டு

அரைவட்ட இமை

நீள்வட்ட கண்

Hyperbola கழுத்து

Parabola வனைப்புடன் நான்

Pairஆக வாழாவிடிலும்

Parallel ஆகவாது வாழவேண்டாமோ


Algebra cobra வாய் எனை கடிக்க

Trigonometry grenade ஆய் நான் வெடிக்க

Sine graph, Cos graph யாய் மனம் துடிக்க

Tan graph ஆக எல்லையற்று போயிற்றே


Sin 900 ஆனா உன் மேல்

Cos 900 ஆனா நான் கொண்ட

Tan 900 ஆனா என் காதலை - கதைத்தேன்

Complex எண் போன்று

Real partயும் Imaginary partயும் கலந்து





உன்னை முழுதும் அடைய - நான்

என்னை அறியும் முன்னே - உன்

எண்ணையும் உன்னையும் அறிந்தேன்


நானோ

உன்னை சேர விரும்பினால்

நீயோ

என்னில் உள்ள

Formula யையும் identityயையும்

அறிந்துவா என்றாய்.


நானும்,

உன்னை அறிய

உன் நாடு வந்தால்

இளவரசன் Gauss

உன்னை காக்க நிற்கிறான்

எண்ணற்ற theorem மோடு

உன் மன்னர் Euler ஓ

உன் மானம் காக்க நிற்கிறான்

எத்தனையோ lemma வோடு


இத்துணைக்கும் மேல் உன் அப்பன் Archimedes

அத்துணை பாடங்களுக்கும் எண் அப்பனுக்கும் சேர்த்து

எதன்னையோ ஆப்புக்களை வைத்துள்ளான்


பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்த

வழியில் வந்த நானோ

பூஜ்ஜியம் ஆனேன் உன்னில்


அதனால்,

கணக்கு

பிணக்கு

வணக்கு

எனக்கு

ஆமணக்கு என்றேன் பாரதி போல



ஆனாலும் அவனே,

காதல், காதல், காதல் - இல்லையெனில்

சாதல் சாதல் சாதல் என்று சாற்றினானே!


இறுதியாக,

அறிவிழந்து,

ஆண்மையிழந்து,

இன்பத்தமிழிழந்து,

ஈன்றவர் நெஞ்சமிழந்து,

உற்றார் உரிமையிழந்து,

ஊன்கொண்ட கொள்கையிழந்து,

எண்கோட்பாடிழந்து,

ஏன் என்ற கேள்விஇழந்து,

ஐயம் கேட்கும் ஆக்கமிழந்து,

ஒன்றுபட நாவலந்தேயம்

ஓங்கி சொன்ன நயமெல்லாம் நானிழந்து,

ஒளடதமான மனம் மரியாதையிழந்து,

நாயேனுக்கு நாயேனையாகி

புதுமையிலும் புதுமைகேக்கும் நான்

பழமையிலும் பழமைகேக்கும் போதும்


By Muthu M




Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page