குழந்தை தொழிலாளி
By Sarathkumar Rajendiran
ஒலகுடிசையில ஒன்றுமில்லாத நேரத்திலும்
ஒய்யாரமா உட்கார்ந்து
உன்கையால சாப்பிட்ட ஒரு காலத்துல
ஆனால், இப்போ..!
உண்ண உணவுமில்லாம
உடுத்த உடையுமில்லாம
உள்நெஞ்சு கதறுதம்மா…!
எச்சி பாத்திரம் கழுவி -மிஞ்சிய
எச்சி சோறு தின்னும்
என் வயிறு நிறையலம்மா…!
கால்வலியோடு கல்சுமந்து
கணக்கையும் கத்துக்கிட்டே…!
அழகை காணவந்த
அயல்நாட்டு காரங்கிட்ட
ஆங்கிலமும் கத்துகிட்டே…!
படிப்பு ஒன்னும் தேவையில்லை
பகுத்தறிவு போதும் என
பசியிடமும் கத்துக்கிட்டே…!
கால் வயிறு கஞ்சிக்கும்
கண்ணுறங்காம உழைச்சும்
காசுபணம் சேரலம்மா...!
ஒருவேளை சோறுக்கும்
ஓய்வேதும் இல்லையம்மா…!
உழப்புக்கேத்த ஊதியமில்லா இந்த
உலகத்துல என்னையும் உட்கார வச்சிபுட்டு
பெத்தெடுத்த மகனை விட்டு
பரலோகம் போனாயே….!
பாவி என்னையும் நினைக்காம..
காரணம்என்னம்மா…?
By Sarathkumar Rajendiran

Comments