top of page

காதல் ஹைக்கூ

Mar 22, 2023
1 min read

By Arockiacelin



பனிவிழும் இரவில்

பௌவுர்ணமி நிலவில்

ஹைக்கூ கவிதை இரண்டு

சிறகடிக்க துடிக்கிறதே……

ஆணிவேரும் சல்லிவேரும்

சேர்ந்தது போல்

ஆசை பூக்கள் பூக்கிறதே….


வாடாமல்லிகாரி இவளை கொய்து

வசியம் செய்து

பூமாலை கோர்க்க வந்த

வனமகன் இவன் தானோ?????

நட்சத்திர பூக்களை

நெத்திசுட்டி, மேகலை, மெட்டி

அமைத்து இவளை

கட்டி கொள்ள வந்த

கள்வன் இவன் தானோ?????


"" காதலில் கரைந்து போக

செத்து செத்து மீண்டும் வாழ

திகட்ட திகட்ட காதலித்து

கெட்டுபோக உருகுதே

இரு உயிர் இங்கே….""





யமுனை ஆற்றோடு

ஈர காற்றோடு

கவிதை இலக்கணத்தில்

கரைந்த ஆண்மகனை

காதல் அம்பு எய்து

கயல்விழி பார்வையினால்

காதல் போர் தொடுக்க வந்த

பட்டத்து யுவராணி இவள் தானோ???

அரும்பு மீசையில் பூத்த

பூக்களை ஏந்தி

குரும்பு ஆசை நூல்களில் கோர்த்து

புன்னகை சிந்தும்

என்னவனை போர் தொடுத்து

வென்றவள் இவள் தானோ ????

"" காதலில் கரைந்து போக

செத்து செத்து மீண்டும் வாழ

திகட்ட திகட்ட காதலித்து

கெட்டு போக உருகுதே

இரு உயிர் இங்கே…….""


By Arockiacelin






Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page