ஒரு தெய்வம் தந்த பூவே
By Sasikumar K
போகாத கோயிலில்லை வேண்டாத சாமியில்லையென எண்ணற்ற கரைதல்களுக்கு முற்றுப்புள்ளியாய் அரும்பினாள் அவர்கள் இதயக்கொடியில்!
தூக்கங்களும் மறந்து போனது குறுநகை சிந்தும் அவள் உளறல் மொழியால்!
அரும்பும் மலர்ந்து அருவியாய் ஆரவாரம் செய்ய, அலுவலகப் பணியில் மூழ்கினார்கள் அவர்கள் இருவரும் !
விலையுயர்ந்த பொருட்களும் ஆடம்பர வாழ்க்கையும் அவள் வசமிருந்தாலும், தன் வீட்டினிலே அகதியானாள் விலையில்லா அன்பில்லாமல் !
தன் பெயர் கூற மாட்டாளா என அவர்கள் ஏங்கிய காலங்கள் மாறி, அவள் பேச்சும் பேரிரைச்சலென அமைதி கொள்கிறாள் ஊமை மழலையாய்!
அவள் கனவு வீட்டில் ஊட்டி வளர்த்த அன்புச்செடியும் பூத்துக்குலுங்க, பூவின் மொழி புரியாத அவர்களின் புறக்கணிப்பில் சாலையோர பூக்களாய்..
By Sasikumar K

Comments