top of page

எவ்வளவு பெரிய சாபம்! (Tamil Poetry) - By Sudha Devi T

10 minutes ago
2 min read

Written By: Sudha Devi T

Category: Poetry

Competition: Poetry and Creative Writing Competition 2026

Sudha Devi T presents "எவ்வளவு பெரிய சாபம்!", a captivating piece of Tamil poetry that delves into the intricacies of beauty and perception. Featured in Hashtag Kalakar's Poetry and Creative Writing Competition 2026, this poem offers readers a profound exploration of the emotional and cultural dimensions within the theme. Sudha Devi's writing is a testament to the power of poetry in expressing complex human experiences and emotions.

About the Work

Sudha Devi T's poem "எவ்வளவு பெரிய சாபம்!" intricately explores themes of beauty, perception, and the emotional burdens carried by individuals. The work is imbued with rich imagery and a contemplative mood, inviting readers to engage with its deeply personal and cultural messages. The poem's style reflects a blend of traditional and contemporary elements, creating a unique voice that resonates with its audience.

எவ்வளவு பெரிய சாபம்! (Tamil Poetry)

Original Submission by Sudha Devi T

கிளையின் நுனியில் அரும்பாகி,

உன் விழியில் சிக்கியபோதே

என் அழகை உனக்குள்

சித்தரித்துவிட்டாய்...

இதழ்விரித்து சிரித்த போது ,

விழிகளுக்கு மட்டும் விருந்தானால் போதுமா?

நாவின் சுவை அரும்புகள் என்ன செய்தது என்றாய்,

தீண்டும் விழிகள் புன்னகைக்கையில்,

'உன்னை மட்டும் இரசித்தால் போதுமா?

என்னையும் கண்டு வியக்கட்டுமே'

என சருகாக்கி, பொடியாக்கினாய்,

தீண்டும் தென்றலின் இசையுடன் யுத்தம் செய்து

என் இதழ்களைப் பிடித்திருக்கையில்,

'உன் தோட்டத்தில் மட்டும் மணம் வீசினால் போதுமோ?'

என யாரோ கேட்க, கிளையொன்றை

வெட்டிக் கொடுத்து புன்னகைக்கிறாய் ...

வேற்றுமையில் ஒற்றுமை கண்டதாலையோ,

வயிற்றைப் பிசைந்துச் செல்லும் முதல்

குருதித் துளியின் வலி மறைத்து,

உலகத்தாரின் ஒளிக் கீற்றுகளை அள்ளிப்பருகும்

பேதை வயிற்றை உரசவும்,

விருப்பமில்லாமல் விலைபோகிற இளம் பெண்

விழியோரம் சுமக்கும் பாரத்தை

என் இதழ்களில் பனித்துளியாய் தாங்கிடவும்,

'விரும்பியே விடமுண்டு விடைபெறும்

என் உடலிலிருந்து வீசும் உன் மணம் ,

என் மனதைவிட பெரிதாகி போனதே '

என நொந்துகொண்டிருக்கும் உள்ளத்தின்

அருகாமையிலேயே என்னையும் சேர்த்துக் கட்டி சிக்கவைத்துவிடத்தானோ,

என் வேரிலிருந்து என்னை வெட்டியெடுத்து,

நார் மணக்க,

என்னை மாலையாக்கி

அழகு என்று நீயே சொல்லிக்கொள்கிறாய்?

'எவ்வளவு பெரிய சாபம்

உங்கள் அழகு என்ற பிம்பத்திற்குள் சிக்கிக்கொள்வது!'

சறுகாகி, பொடியான என் புன்னகையை

எங்கேயோ புதைத்துவிட்டு,

மாலையாகி மணம் வீசும் என்னைக் அழகு என்கிறாய்...

உன் விழியில் அழகானதால் தானே,

காற்றில் ஓவியம் தீட்டி கோலமிட காத்திருந்த

என் விழியின் அழகான வண்ணத்துப்பூசசியை காணாமலே

உன் சிந்தையில் தோன்றிய அழகாய் மாறி,

மீள வழி அறியாமல்,

மீண்டும் விதைப்பரப்பிச் செல்கிறேன்,

இதழ்களை பறித்துச் சென்ற

மாயக்காற்றுடன் வெறும் மலர் தண்டாய்,

மயானத்திற்கு...

About the Competition

The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is an esteemed event celebrating literary excellence across diverse languages and forms. It serves as a platform for writers to showcase their talent and engage with a wider audience, fostering a vibrant community of creative expression. Participants from around the world contribute to this rich tapestry of storytelling and poetic artistry.

We extend our heartfelt thanks to Sudha Devi T for her powerful contribution, "எவ்வளவு பெரிய சாபம்!", to the Poetry and Creative Writing Competition 2026. Her ability to weave complex emotions into her poetry is truly commendable. We look forward to seeing more of her inspiring work in the future.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Recent Posts

See All
No longer a white rose. - By Kamo

Written By: Kamo Category: Poetry Competition: Global Poetry and Creative Writing Competition 2026 In the evocative poem "No longer a white rose." by Kamo, readers are invited to delve into a raw and

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page