top of page

எங்கே மனிதநேயம்????

Mar 25, 2023
1 min read

By Arockiacelin


மனிதநேய தேடுதலில் மிருதனை காண்கிறேன் தினம் வீதியிலே ..... பிள்ளையை குப்பையாய் வீசுவதும்

பெற்றோரை வீதிக்கு விரட்டுவதும்

வாடிக்கை ஆகிவிட்டது

வித்தகர்கள் மத்தியில்.......

ஜாதிவெறியின் மயக்கத்தில்

இரத்தபானம் அருந்துகிறான் ;

மதவெறியின் உச்சத்தால்

மனிதனை உயிரோடு எரிக்கிறான்,

அலைபேசியில் காமம் பார்த்து,

மோகபேயை ஊட்டி வளர்த்து,

ஆசைவார்த்தை காட்டி,

எவளாயினும் அடித்துதைத்து - தன்

விந்தை விஷமாய் புகுத்துகிறான்...

எங்கே மனிதநேயம் ??????????

கணவனுடன் வீட்டிலே ;

கள்ளக்காதலனுடன் ரோட்டிலே ,

கெட்டலைந்து திரிகிறாள்.....

களவு செய்தி பிறர்

காதுக்கெட்டியதென்றால் ,

கட்டியவனை கல்லறைக்குள்

அடைத்து விடுகிறாள் ......




குழிபரிக்கும் குள்ளநரி தந்திரங்கள்

அரசு ஊழியன் என்றால்

அங்கங்கே அத்துமீறல்கள் .....

காகித காந்திக்கு மனித

உயிரை பறிக்கும் மார்ஃபியாக்கள்

எங்கே மனிதநேயம் ??????

எளியவன் என்றால்

எகத்தாள பார்வை.......

வளியவன் என்றால்

மத்தாளத்துடன் சால்வை .....

இப்படி படிப்படியாய் குறைந்து

வருகிறது மனித நேயம் .....

அன்று கூடி வாழ்ந்திருந்தவன் ;

இன்று ஓடி ஒளிகிறான் ,

இயந்திரங்களாய் வளர்ந்துயரும்

மனிதனை பார்த்து......

தொழில்நுட்பத்தை வளர்க்கும்

அயறா முயற்ச்சியில் சிருகச்சிருக

தொலைத்து கொண்டிருக்கிறோம் நாம் மனிதநேயத்தை ......

மாயமாகும் இந்த

மனித நேயத்தை ........



By Arockiacelin







Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page