top of page

உயிரைக் கொல்லும்

Nov 17, 2022
1 min read

By Jeevitha S


வளரும் வரைத் தெரியவில்லை

உன் அருமை அவனுக்கு

மீசையும் அரும்பியது பருவமும் வந்தது

உன் மேல் மோகமும் கூடியது

கன்னி போல அவனிடம் உன்னை மறைக்க

அதனாலேயே ஈர்க்கப்பட்டான் தன்னாலே

அறமில்லை என்றுண்ர்ந்து அச்சத்திலே பல நாள் ஓட

ஒரு நாள் ஆர்வமிகுதியில் உன்னைத் தொட

அழகாய் பொருந்தினாய் அவன் விரல்களின் ஊடே

உன்னைத் தழுவ நாணம் மறைய

அவன் சுவாசத்தோடு கலந்தாய் ஒன்றாய்

புதுவகைப் புத்துணர்ச்சித் தந்தாய் மிருதுவாய்

உன்னைத் தீண்டும்போதெல்லாம்

உலகிடம் உன்னை மறைத்தான்

அவன் தன்னையே மறந்தான்

ஆவலால் ஈர்க்கப்பட்ட அவன்

அறியாம(மையி)ல் அடிமையுமானான்

தன் அடிமைத்தனத்தால்

தன் ஒழுக்கம் இழந்தான் தன் மதிப்பை இழந்தான்

தன் சுற்றம் இழந்தான் இறுதியில் தன்னையே இழந்தான்





நீ

அவன் இதயத்தை மட்டும் காயப்ப்படுத்தவில்லை

அவன் இதயத்தில் இருப்பவர்களையும் சேர்த்தே !!

உன்னைத் தீயிட்டுக் கருக்கியதனால் ஏனோ

அவனது நெஞ்சத்தைச் சுருக்கிவிட்டாய் !!

உன்னை சொல்லிக் குற்றமில்லை

உன் வெள்ளைத் தோலில் மயங்கி

நச்சு புகையில் உருகி

பூவுலகில் பொசுங்கி போனவர்கள் பலர் என்றறிருந்தும்

உன்னைத் தீண்டினானல்லவா ??

அவனது அன்றையக் குற்றமே இன்றையத் தண்டனையாக

வாழ்வின் முடிவாக !!

ஒருவேளை

உன்னை அலச்சியப்படுத்தியிருந்தால்

தன் லட்சிய வாழ்க்கையை அடைந்திருப்பானோ !!

உன்னைக் கைவிட்டிருந்தால்

தன் உறவுகளைக் கைவிட்டிருக்க மாட்டானோ !!

உன்னை தன் மூச்சாய் அடையாது இருந்திருந்தால்

அவன் இப்படி மூர்ச்சையாய் இருக்கமாட்டானோ !!

அவன் இப்படி மூர்ச்சையாய் இருக்கமாட்டானோ !!


மூடனாய் உணர்ந்து நிருத்தாவிட்டால்

புகையை அனைக்க இயலாது !!

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு

கேடு விளைவிக்கும்

உயிரைக் கொல்லும்


By Jeevitha S





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page