இன்றைய சமூகம்
By Sarathkumar Rajendiran
சமூகத்தின் கட்டமைப்பு
சமத்துவம் இழந்து
சரிந்து வீழ்கிறது -அதில்
அரசியல் புகுத்தி
அனுக்கூலம் பார்க்கும் சிலர்…!
உழைக்கும் வர்கத்தினரை சுரண்டி
உண்டுவிட்ட மிதப்பில்…,
அதிகாரத்தில் அமர்ந்து மிரட்டல் தோணியில்
உழப்பவனை உதவாக்கரை என
அதட்டும் சிலர்…!
இவர்களுக்கிடையில்
லாபம் பார்ப்போர் சிலர்.!
எப்படியாவது மேலே வரலாம்
என உழப்பவர் சிலர்...!
எப்படி வேண்டுமானாலும் மேலே வரலாம்
என உழப்பவனை தள்ளிவிட்டு
உயரம் தொட விரும்பும் சிலர்…!
உழைப்பவனுக்கு அறிவெதற்க்கென
அவன் அடிப்படை உரிமை பறிக்கும் சிலர்…!
திறமை கொண்டவனின் திறனை
திட்டமிட்டு தடுக்கும் சிலர்..!
பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற சொல்
பூமியில் என்றோ புதைந்து விட்டது…!
தெரிந்தே ஏமாறுகிறோம்…!
இனி ரோசம் கொண்டு
கேள்வி கேட்போம்..!
பதில் கிடைக்கும் வரை….!
By Sarathkumar Rajendiran

Comments