ஆணவகொலை
By Sarathkumar Rajendiran
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் பிரிவினையால்
உயிர் பலி கேட்டு
உண்மை காதலை உருக்குலைத்து
ஊரார் முன்னிலையில்
நாடக காதல் என கொச்சை சுமத்திய
நயவஞ்சகர்களே….
உங்கள் இரத்த வெறி தீர்ந்ததா…?
சாதியென்ன..,மதமென்ன..,
சமத்துவம் ஒன்று போதுமே
சாமானியனுக்கு….!
கணவனின் கைக்கூடி கைகுழந்தை பெற்றேன்.
கண்ணுக்குள் பல கனவுகளோடு -அவன்
கரம் பிடித்தேன் - ஆனால்
தரம் கெட்ட நீங்கள்
அவன் தராதரம் கேட்குறீர்கள்..!
காதலிக்க தகுதி வேண்டுமா..?
கரம் பிடிக்க தராதரம் வேண்டுமா..?
அதை குப்பையில் வீசுங்கள்…!
தஞ்சம் வந்த என்னை -அன்புடை
நெஞ்சம் கொண்டு
கொஞ்சம் கூட பயமில்லாமல்
அன்பால் அறவணைத்த
ஆண் மகன் அவன்…!
ஆனால் ..
என்னவனை இன்று என் கண்முன்னே
சாதிக்கொண்டு சாதியால்
வீழ்த்திவிட்டர்களே….!
மன்னவன் மடிந்து -என்
மடிசாய்ந்து கிடக்கிறான்…!
மண்ணில் பாயும் அவன் குருதிக்கு
உங்கள் குலம் பதில் சொல்லுமா..?
பிரிவினை என்ற பேரிருளில் சிக்கிய
பிஞ்சு நெஞ்சங்களே…
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
மனிதமின்றி மண்ணும் பாலைவனம்தான்…!
மனிதமில்லா உலகில்
மனிதனாய் வாழ்ந்து என்ன பயன் ..?
மரணிப்பதே மேல்…!
By Sarathkumar Rajendiran

Comments