அரவணைக்கும் கணையாழி
- Hashtag Kalakar
- May 9, 2023
- 1 min read
By Dinesh Elumalai
Tamil Version: - அரவணைக்கும் கணையாழி
திறவுகோலைத் தொலைத்துவிட்டான் உடையவன்
தண்டனையாக
அடிவாங்கியது பூட்டு
அதுபோல்
காலத்தின் கட்டாயமாகத் தொலைந்தவன் நான்
தட்டிக்கொடுத்து
தாயாவாள் உன்னை அரவணைப்பதை விடுத்து
சொல்லெனும் கல் எடுத்து
உன்னைத் தாக்கிய செய்தியை
கேட்ட அந்நேரம்
ஆரத்தழுவி ஆறுதல் கூறத்தான் ஆசை
அருகிலே அனுதினமும் இருப்பது சாத்தியமன்று
ஆனால் மன ஆதரவாய் என்றும் உண்டு
இருப்பது சத்தியமென்று
அன்பளிப்பாய் இந்த கணையாழி
உன்விரலோடு உறவாட விடுவாயா!
English Translation: - Hugging Ring
When a key is lost, the lock suffers from hammering,
Likewise, she is someone who is lost in life,
All she expected was a soothing and comforting hug from her mom,
Instead, I was concerned when she said her mother had pierced her with rude words,
I felt like hugging you close to my heart and comforting you,
But Alas,
You are not mine now,
I wanted to give you a ring that would wrap around your finger,
And give you a feeling of my closeness when you are troubled,
Will you accept my Ring?
By Dinesh Elumalai

Comments