அரைமணி நேரம் அல்லது இலவசம் - By Prasanna P
Written By: Prasanna P
Category: Poetry, Short Story
Competition: Poetry and Creative Writing Competition 2026
In a poignant blend of poetry and storytelling, Prasanna P offers a compelling narrative titled "அரைமணி நேரம் அல்லது இலவசம்" (Half an Hour or Free) for the esteemed Poetry and Creative Writing Competition 2026. This submission, rich in cultural nuance and emotional depth, provides a window into the life of a modern family. With a focus on the challenges of balancing work and parental responsibilities, Prasanna P's work echoes the universal struggle of time management in a fast-paced world.
About the Work
Prasanna P's narrative delves into the intricacies of parental duties amid professional obligations, using vivid imagery and relatable scenarios. The mood is a blend of tension and tenderness, capturing the essence of a day fraught with unexpected delays and emotional turmoil. Through skillful storytelling, the piece highlights the dichotomy between corporate efficiency and human empathy, leaving readers to ponder the value of time and care.
Prasanna P
Original Submission by Prasanna P
அரைமணி நேரம் அல்லது இலவசம்
"Sorry dear. Held up in a meeting. Will be late today." என்று குமாருக்கு ஒரு sms அனுப்பியிருந்தாள் ஆனந்தி. அவர்களுக்கு சனா என்று ஏழு மாத குழந்தை ஒன்று. இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறைக்கு இவர்கள் ஒன்றும் விதிவிலக்கில்லை. இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஆயினும் குழந்தையை தாங்களே கவனித்துக் கொள்ள தங்களது அலுவலக வேலைகளையும் நேரத்தையும் அதற்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளும் சாத்தியம் இருந்தது.
அன்று மாலை எதிர்பாராத விதமாக ஆனந்தியால் அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கு கிளம்ப முடியவில்லை. அதை குமாருக்கு sms மூலம் தெரியப்படுத்தி இருந்தாள்.
அவள் வந்து உணவு சமைத்து உண்ண மிகவும் தாமதம் ஆகிவிடும் என்று எண்ணி அன்றைய இரவு உணவை Foodkart app இல் order செய்யலாம் என்று முடிவு செய்தான் குமார். Foodkart app இல் அன்று ஒரு சலுகை தந்திருந்தனர். உணவு order செய்து அரைமணி நேரத்தில் அது அவர்களுக்கு delivery செய்யப் படா விட்டால் அவர்கள் உணவுக்கு பணம் தர தேவை இல்லை என்று. FREEIFNOT30 என்ற கூப்பன் உபயோகித்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. குமார் அந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டு இரவு உணவை order செய்தான்.
"உங்களது order ஒப்புக்கொள்ளப் பட்டது. உணவு தயாரிக்கப் பட்டு வருகிறது. கங்கா என்பவர் உங்களது உணவை pick up செய்து delivery செய்வார்" என்று Foodkart app குமாருக்கு தகவல் தெரிவித்தது. ஆனந்தி அன்று ஒருநாள் வீட்டிற்கு தாமதமாய் வருவதால் எந்த ஒரு பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்று எண்ணி இருந்த குமாருக்கு ஒரு சவால் காத்திருந்தது. அம்மாவின் முன்னறிவிப்பு இல்லாத தாமதத்தை சனா ஏற்க தயாராக இல்லை. அவளது அழுகை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு இருந்தது.
"ஹலோ.. சொல்லு மா".
"கொஞ்ச நேரம் சமாளி மா"
"அரைமணி நேரமா அழுவுதா?? அச்சச்சோ சரி பத்து நிமிஷத்துல வந்துடறேன்"
தாயின் ஸ்பரிசம் தழுவி அவளிடம் பால் குடித்த பின்னே சமாதானம் அடைந்தது குழந்தை.
"ஹலோ.. எவ்ளோ நேரம்.. ஆமாம் .. அதிலேயே மூணாவது ரைட்ல ரெண்டாவது வீடு.. சரி.. சீக்கிரம் வாங்க" பசியாலும், சனாவின் அழுகையாலும் நிதானம் இழந்திருந்தான் குமார். Calling bell அடித்தது. "என்னங்க, ஏற்கனவே online la pay பண்ணிட்டா இப்படி late-ஆ delivery பண்ணி காச கொள்ளை அடிப்பீங்களா?" சனா வின் சோர்ந்த அழுகையோடு சேர்த்து குமாரின் கோபக் குரலும் ஒலித்தது.
"Sorry sir. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. உங்க amount உங்களுக்கு refund ஆகிடும் sir. அச்சச்சோ எண்ண சார் குழந்தை இப்படி சோர்ந்தி ருக்கு" என கங்கா என்ற அந்த தாயுள்ளம் பதறியது.
ஒரு பெண் என்றதாலோ என்னவோ குமாரும் சற்று தன்னை சாந்தப் படுத்திக்கொண்டு, "இன்னும் என் wife office ல இருந்து வர்ல. இன்னிக்கி எதோ வேலை ல மாட்டிக்கிட்டா போல.. அதான் அரைமணி நேரமா அழரா. என்ன பண்றதுன்னு தெரியல."
"இவ்வளவு நேரம் அழுதா குழந்தைக்கு ஒத்துக்காது sir. எனக்கும் இதப்போல ஒரு பொண்ணு இருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க. குழந்தையோட நல்லதுக்காக நான் இத செய்றேன். குழந்தை ய குடுங்க. ரூம் எங்க இருக்கு?"
கங்காவின் ஸ்பரிசம் தழுவி அவளிடம் பால் குடித்த பின் சனா சமாதானம் அடைந்தாள். அரைமணி நேரம் அழுது அவள் மகள் பட்ட அவதியை பார்த்த பின் வேறொரு குழந்தையை அதே நிலையில் பார்த்துவிட்டு அப்படியே விட்டு செல்ல கங்காவிற்கு மனமில்லை. உணவை தாமதமாக delivery செய்வதால் அவளது வருமானத்தில் கொஞ்சம் பிடிக்கப்படும் போலும். வேலை செய்து சம்பாதிப்பதே அந்த குழந்தைக்காக தான் எனும்போது, வேறெதுவும் முக்கியம் இல்லையே என்று கங்கா தனது வீட்டிற்கு சென்று அவளது குழந்தைக்கு பாலூட்டிவிட்டு வந்ததால் தான் குமாரின் order ஐ delivery செய்ய சற்று தாமதம் ஆனது என்ற விளக்கத்தை Foodkart என்ற அந்த கார்ப்பரேட் மதிக்கபோவதில்லை. காசுக்கு விலை போனது மனிதாபிமானதிற்கு விலை போகாது.
"வேறு ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் தரலாமா?" என்று கூகுள் செய்துகொண்டு இருந்தான் குமார்.
டின் டின் என அவன் கைப்பேசி ஒலிக்க, அவனுக்கு ஒரு sms. உங்களது உணவு அரைமணி நேரத்திற்குள் உங்களுக்கு delivery செய்யப்படாததால் உங்கள் பணம் உங்களுக்கு refund செய்யப் படுகிறது என்று Foodkart இல் இருந்து அனுப்பி இருந்தார்கள்.
அவர்களுக்கு தெரியாது, அவன் மகளுக்கும் உணவு இலவசமாக கிடைத்தது என்று. தெரிந்திருந்தால் அதற்கும் ஒரு விலை வசூலித்து இருப்பார்கள்.
~ ப பிரசன்னா ✍🏼
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious event celebrating literary talent across the globe. This platform provides writers an opportunity to showcase their creativity and connect with a community of fellow enthusiasts. The competition encourages diverse voices and styles, fostering a spirit of artistic expression and innovation.
We extend our heartfelt thanks to Prasanna P for the thoughtful and moving narrative "அரைமணி நேரம் அல்லது இலவசம்." Your participation in the Poetry and Creative Writing Competition 2026 adds a rich layer to the tapestry of voices celebrating the art of storytelling. We look forward to more of your insightful and evocative contributions in the future.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments