அன்பே! என் அந்தாதி!
By Gomathi Sankar A
தனிமையில் நான்
தவித்துப் போகையில்
தன்னம்பிக்கையாய் வருவாய்
நீயே என் அந்தாதி!
என் உணர்ச்சியாவும்
உறைந்து போகையில்
உயிர்த்தருவாய்
நீயே என் அந்தாதி!
என் வலிகள்யாவும்
வந்து போகையில்
வழி வகுப்பாய்
நீயே என் அந்தாதி!
என் வாழ்க்கைப் பயணம்
முடியும் வேலையில்
வர மளிப்பாய்
நீயே என் அந்தாதி!
மனம் குணம்
அறிவு தெளிவு
இவையாவும் கரைந்து போகையில்
காதலாய் கைக்கொடுப்பாய்
என் முதலும் முடிவுமாய்
நீயே என் அந்தாதி!
Translation:
அந்தாதி means “Beginning and End”.
My dear! My Beginning and End!
When I’m suffering alone, you came as my self confidence…my dear you are my beginning and end. When my feelings were freezing, you gave me life….You are my beginning and end. When my pains were visiting, you gave me path….You are my beginning and end. When my life’s journey comes to an end, you will give me wishes……You are my beginning and end. When my nature of mind and the clarity of my knowledge melting away, you gave me hand as the love of my life….You are my beginning and end.
By Gomathi Sankar A

Comments