அத்துமீறல் - Invasion
By Vasanthi Vishwanathan
அங்கொன்றும் இங்கொன்றும் பிய்த்து கொண்டு வரும்; அளவான கூடுகட்டி இரைத்தேட முட்டைதனை விட்டுச் செல்லும்;
சோம்பல் மீறிக் கள்ளக் குயிலொன்று தன் முட்டையை இட்டும் செல்லும்; ஏமானிக் காகம் பாவம் அக்குஞ்சுக்கு வளர்ப்புத்தாயாகும்.
இருவாசல் மாளிகை ஒன்றை தலத் தொங்கியே வார்த்தெடுக்கும்.
அழையாத விருந்தாளியாய் கருநாகம் தலை நுழைத்து
எட்டிப்பார்க்கும் ;
தாளாத துயரத்தால் பரிதவித்துப் போர்த்தொடுக்கும்.
போராடித் தளர்ந்துப்போய் குழந்தை தனைப் பரிக்
கொடுக்கும்..
நாவரண்டு நகரம் நோக்கில் படையெடுக்கும் யானைக்கூட்டம்.
நகர-மோகத்தினால் விரட்டியடிக்கும் மக்கள்
கூட்டம்.
வளத்தை அழித்து வசதி அமைத்து வளத்தைத் தேடநினைந்தே
அஞ்சி அஞ்சி வாழ்வதையே வழக்கமாக்கி வைத்தோம்.
Translation
Every now and then a nestling of the same size leaves an egg for prey,
Let a false quail lay its eggs despite laziness and uses the innocence of the crow
The deceived crow is now the brood of the wicked offspring, child of the false pride.
A two- door house with a hanging head, palace of the baya weavers.
an uninvited guest, the black dragon intrudes, the child is peeking only to get itself killed
It doesn’t know it’s mother will be wracked with unrelenting grief.
weakened by the struggle , the crow suffers in solitude.
A herd of elephants invading thirst filled city
are driven away by the city- madness.
We have made it a habit to live in fear of destroying resources and building facilities in search of resources.
By Vasanthi Vishwanathan

Comments