அதிசயப் பேனா - By Prasanna P
Written By: Prasanna P
Category: Short Story
Competition: Poetry and Creative Writing Competition 2026
In the enchanting world of Tamil literature, Prasanna P, writing under the name அதிசயப் பேனா, presents a captivating short story titled "அதிசயப் பேனா." This piece is part of the esteemed Poetry and Creative Writing Competition 2026, showcasing a blend of magic and human emotion. Through a narrative filled with intrigue and subtle humor, Prasanna invites readers to explore the mysterious power of a seemingly ordinary pen and its impact on everyday life.
About the Work
"அதிசயப் பேனா" weaves a compelling narrative that explores themes of trust, mystery, and the human psyche. The story artfully balances realism with fantasy, as it delves into the lives of its protagonists and the enigmatic forces at play. Prasanna's style is characterized by sharp dialogue and vivid imagery, creating a story that is both engaging and thought-provoking. The tale leaves readers pondering the boundaries between reality and the supernatural.
அதிசயப் பேனா
Original Submission by Prasanna P
அதிசயப் பேனா
ரகுநாதனுக்கும் மேகநாதனுக்கும் இடையே இருபத்தி ஐந்து ஆண்டுகள் பழக்கம் இருக்கும். “சார், அடுத்த வாரத்தோட எனக்கும் ரிடயர்மென்ட். பி எஃப் பணத்துல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தாச்சு. பென்ஷன்ல காலத்த தள்றத நினைச்சா பயமா இருக்கு. மருந்து மாத்திரைகளுக்கான செலவு வேற கூடிக்கிட்டு போகும்.” என தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் ரகுநாதன்.
“டோக்கன் நம்பர் ஒன்று இரண்டு ஆறு” என்ற அந்த ஒலிக்கு மேகநாதனுக்கு துணையாக வந்திருந்த ரகுநாதன், எழுந்து கவுன்டருக்கு சென்றார்.
“எவ்வளவு வித்ட்ரா பண்ணுறீங்க?”
பதினைந்தாயிரம். டோக்கனைக் கொடுத்து பணத்தைப் பெற்று சரி பார்த்தார். “இந்தாங்க சார். செக் பண்ணிட்டேன். சரியா இருக்கு.” எண்பத்தி ஐந்து வயதான மேகநாதன் பணத்தைப் பையில் வைத்துக்கொண்டு கைத்தடி ஊன்றி எழுந்தார். இருவரும் வங்கியை விட்டு வெளியே நடந்தனர். மேகநாதன் தனது சட்டைப்பையில் இருந்த பேனாவை ரகுவிடம் தந்து, “இந்தா ரகு, இந்த பேனாவ வெச்சுக்கோ. இதோட வரலாறையெல்லாம் கேக்காத. இது ஒரு அதிசயப் பேனா. என் ரிடயர்மென்ட்க்கு அப்புறம், உன்னைப்போலவே நான் தவிச்சப்போ எனக்கு உறுதுணையா வந்த பேனா. இதை நீ உன் செக் எழுதவும் அதுல கையெழுத்து போடவும் மட்டும் தான் பயன் படுத்தனும். நீ எவ்வளவு எழுதுகிறாயோ, அந்தப் பணம் உன் வங்கி இருப்பு குறையாமல் உனக்கு கிடைக்கும். பேராசை கொள்ளாமல் உன்னோட அத்யாவஸ்ய தேவைகளை பூர்த்தி செய்து சாமர்த்தியமாக பயன் படுத்திக்கோ. இந்த பேனாவை பற்றிய ரகசியத்தை யார்கிட்டயும் எக்காரணம் கொண்டும் சொல்லிடாத. இந்த இருபத்தி ஐந்து ஆண்டுகள்ல, பேனா மை பாதி தீர்ந்துடுச்சு. நீ இதை சாமர்த்தியமாக பயன் படுத்தினால், இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு நீயும் கவலை இல்லாமல் இருக்கலாம். இதுக்கும்மேல தனியா இருக்க வேண்டாம்னு என்னையும் பையன் டெல்லிக்கு கூப்பிடுறான்”
நாட்கள் நகர்ந்தது. ஓய்வு பெற்ற ரகுநாதன், அன்று காலை வங்கிக்குச் சென்று தனது மாதிரிக் கையெழுத்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்தைக் கொடுத்தார். “அது ஒன்னும் இல்ல சார், வயசாயிகிட்டிருக்கு. முழு கையெழுத்தையும் மாறாம போட்டுக்கிட்டிருக்க முடியுமானு தெரியல. அதான் கொஞ்சம் சுருக்கி ஈசியா போடுகிறாப்ல மாத்திகிட்டேன்” என்று வங்கி மேலாளருக்கு விளக்கம் அளித்தாலும், பேனாவில் மையை மிச்சம் செய்ய ரகு கையாண்ட யுக்தி.
“நீலா, வீட்டுச்செலவுகளுக்கு மாசம் எவ்வளவு ஆகுது நம்ம ரெண்டு பேருக்கு?”
ரகுவின் மனைவி நீலா. “பால், மளிகை, கரண்ட் பில், டெலிஃபொன், பீபி சுகர் மாத்திரைகள் தவிர சின்ன சின்ன செலவுகள் சேர்த்துப் பார்த்தா, ஒரு ஆறாயிரத்திலிருந்து ஏழாயிரம் வரைக்கும் ஆகும்ங்க. ஏன் கேட்கிறீங்க?”
“இந்த மாசத்திலிருந்து பென்ஷன் மட்டும்தான். அதான் ஒரு கணக்குக்காக கேட்டேன். அப்போ மாசம் ஏழாயிரம் குடுத்தா, குடும்பத்த நடத்திடுவாயா?”
முதல் மாத பென்ஷன். காசோலையை எழுதி கையெழுத்திட்டு, வங்கி சென்றார் ரகு.
“டோக்கன் நம்பர் ஒன்பது நான்கு”
மூன்று இரண்டாயிரம் ருபாய் நோட்டுக்கள், ஆறு ஐநூறு ருபாய் நோட்டுக்கள், பத்து நூறு ருபாய் நோட்டுக்கள். பத்தாயிரம். எண்ணி சரி பார்த்து கொண்டார். பாஸ்புக் கில் என்ட்ரி. டெபாஸிட் காலத்தில் இந்த மாத பென்ஷன் ரூ.22,540. வித்ட்ராயல் காலத்தில் எதுவும் என்ட்ரி இல்லை. ஆம் வங்கி இருப்பு குறைய வில்லை. உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வீட்டை நோக்கி நடந்தார் ரகு. அறைக்குள் சென்று சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்து ஒரு முத்தமிட்டு, மீண்டும் சட்டைப்பையில் வைத்துவிட்டார். ரகுவின் இந்த செயலை நீலா கவனிக்கத் தவரவில்லை. இருந்தும் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
“நீலா, இந்தா ஏழாயிரம் ருபாய் இந்த மாசச்செலவுக்கு”
இரண்டாம் மாத பென்ஷன். பத்தாயிரம் ருபாய். நோட்டுக்கள் எண்ணிக்கை மாறவில்லை. பாஸ்புக் கில் என்ட்ரி. டெபாஸிட் காலத்தில் இந்த மாத பென்ஷன் ரூ.22,540. வித்ட்ராயல் காலத்தில் எதுவும் என்ட்ரி இல்லை. ஆம் இந்த மாதம் எடுத்த பத்தாயிரமும் வங்கி இருப்பில் இருந்து குறைய வில்லை. வீடு சென்று பேனாவுக்கு முத்தமிட்டார் ரகு. அதை கவனித்த நீலாக்கு இந்த முறை ரகுவின் நடவடிக்கை மீது ஏதோ வியப்பை ஏற்படுத்தியது. எதுவும் கேட்காமல் ரகு தந்த ஏழாயிரத்தை வாங்கி வைத்துக்கொண்டாள்.
மூன்றாம் மாத பென்ஷன். கடந்த மாதம் வரை நடந்ததில் எந்த மாற்றமும் இல்லை, நீலாவின் பின்தொடர்வைத் தவிர. “வீட்டைப் பூட்டிட்டு எங்க போய்ட்ட நீ, எவ்வளவு நேரம் வெய்யில்ல நிக்கறது” என்று எரிச்சலுடன் கேட்டார் ரகு.
நீலா, “இன்னிக்கி சஷ்டிங்க, நாலாவது வீட்டு சுசிலா, கோயில்ல அபிஷேகத்திற்கு கொடுந்திருந்தாளாம். அவளால போகமுடியலனு என்னைப்போய் ப்ரசாதத்தை வாங்கிட்டு வர சொன்னா. நீங்க பேங்க்ல இருந்து வர்றதுக்குள்ள வந்துடலாம்னு நினைச்சேன். இன்னிக்கு பேங்க்ல கூட்டம் இல்லையா?”
கதவு திறந்தாயிற்று. ரகுவிடம் வீட்டுக்குள் செல்ல இருந்த ஆர்வம், நீலாவின் கேள்விக்கு பதில் கூறுவதில் இல்லை. இந்த மாதமும் தவரவில்லை பேனா முத்தமும் நீலாவின் கவனமும். மதிய உணவுக்கு பின் ரகு இளைப்பாற உறங்கிக் கொண்டிருந்த வேளை. நீலா, சீ ஐ டி நீலாவாக மாறி இருந்தாள். பாஸ்புக்கைப் பார்த்தாள். அந்தப் பேனாவில் ஏதோ அபூர்வம் இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. பெண்களின் உள்ளுணர்வும் யூகமும் தொண்ணூறு சதவிகிம் உண்மையாகத்தான் இருக்கும். அதை பரிசோதித்து பார்த்து விட வேண்டும் என்று, அந்த மாதத்திற்கான மளிகைச்சாமான்கள் தேவையை, அந்த பேனா கொண்டு எழுதினாள். அன்று மாலை மளிகைக் கடை சென்று, தேவைகள் சீட்டை தந்தாள். “ஒரு எட்டு மணி போல குமார் சாமான்லாம் வீட்ல கொடுத்திட சொல்றன் அக்கா” என்று மளிகைக் கடைக்காரர் கூற, வீடு திரும்பினாள் நீலா.
மணி எட்டு. ரகு மருந்தகம் சென்றிருந்தார். குமார் மளிகைச்சாமான்களை வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றான். பணத்தைப் பற்றி அவன் ஒன்றும் கேட்கவில்லை. அந்தப் பேனாவின் சக்தியால் தானோ என்று எண்ணிக்கொண்டாள்.
நான்காம் மாதம். இருப்பு குறையாமல் பணம் எடுத்ததும், பணம் வாங்காமல் மளிகை வந்ததும் இந்த மாதமும் நடந்தது.
மறுநாள் மதியம், நீலா வற்றலை வெய்யிலில் காயவைத்துக் கொண்டிருக்கயில், “நீலா அக்கா, நம்ம வார்ட்ல எல்லா வீட்டுக்கும் தனிக் குடிநீர் குழாய் இணைப்பும், சாலைச்சீரமைப்பும் கேட்டு மனு எழுதியிருக்கோம். எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கி கவுன்சிலரை பார்த்து கொடுக்கப்போறோம். இதுல உங்க பெயர் எழுதி கையெழுத்து போடணும்.” என்று கேட்டு சுற்றத்தாரில் நால்வர் வந்திருந்தனர். மனுவை வாங்கிப்படித்து, ”இந்த மனுவிற்கெல்லாம் அவங்க செவி அசைப்பாங்கன்னு இன்னும்மா நம்புறீங்க?” என்றாள் நீலா. அவர் நீட்டிய பேனா கொண்டு பெயர் எழுதிவிட்டு, கையெழுத்து போடுகையில் பேனா எழுத வில்லை. “பேனா எழுதலையே, வேற பேனா இருக்கா?”.
“வேற பேனா இல்லையே க்கா”
“கொஞ்சம் இருங்க”, என்று உள்ளே சென்று, ரகுவின் சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுத்து வந்து மனுவில் கையெழுத்திட்டாள்.
ஒரு வாரம் கழித்து, தனிக் குடிநீர் குழாய் இணைப்புக்கான வேலைகளை குடிநீர் வாரியம் துவங்கியது. நீலாவிற்கு அந்தப் பேனா மீதான நம்பிக்கை வலுத்தது. குழாய் இணைப்புக்கு பின்னர், சாலைகளும் சீரமைக்கப்பட்டது.
ஒரு நாள் மாலை, நீலா கோவில் சென்றிருந்த வேளை, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார் ரகு. சர்க்கரை போட்டு காபி குடிக்க வேண்டும்போல் இருந்தது. சமையல் அறை சென்று, காபி போடத்தொடங்கினார். சர்க்கரை டப்பாவை திருப்பிவைக்கயில், கை இடரி, பக்கத்தில் இருந்த பருப்பு டப்பா கீழே விழுந்து வாயைப்பிளந்தது. உள்ளிருந்த இரண்டாயிரம் ருபாய் நோட்டுக்களின் வழியே காந்தி சிரித்தார். நீலாவும் வீட்டுக்குள் நுழைந்தாள்.
“நீலா, ஏது இவ்வளோ பணம்?”
“என்னை மன்னிச்சுடுங்க.”
“என்ன நீலா ஆச்சு? சொல்லு”.
“நீங்க மாசாமாசம் பணம் எடுக்க உபயோகிக்கிற பேனா, ஒரு அதிசய பேனான்னு எனக்கு புரிஞ்சுது. அந்த பேனாவில் மளிகை லிஸ்ட் எழுதி கொடுத்தேன். ரெண்டு மாசமா பணமே வாங்காம பொருள் கொடுத்துட்டு போறாங்க. அந்த மளிகைக்காசத்தான் பருப்பு டப்பால வெச்சுருந்தேன்.
அது மட்டும் இல்லைங்க, அந்த பேனால தான் மனு கையெழுத்து போட்டேன், குடிநீர் குழாய், நல்ல ரோடுன்னு எல்லாம் நடந்துருக்கு.”
பதறியடித்து அந்த பேனாவை எடுத்து மையின் அளவைப்பார்த்தார் ரகு. “இப்படி பண்ணிட்டியே நீலா” என்று மனம் நொந்து, பேனா வந்த கதையையும், அதைப் பயன்படுத்த அவருக்கு மேகநாதன் தந்த அறிவுரையையும் நீலா விடம் சொன்னார் ரகு. “இப்ப பாரு, இதுல இருக்கிற மையை வெச்சு இன்னும் பதினஞ்சு இருபது செக் தான் எழுத முடியும். விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கும்பொது இந்த பென்ஷன மட்டும் வெச்சு எவ்வளவு காலம் ஓட்டமுடியும் சொல்லு!”
கவலை சூழ நிலவியிருந்த அந்த அமைதியை, வினாடிகள் ஓடித்தொடங்கிய செய்திகள் ஆக்கிரமித்துக்கொண்டது. “வணக்கம்” “வணக்கம்” “இன்றைய முக்கியச்செய்திகள், தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலவரைகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.”
செய்தியைக்கேட்ட ரகுவும், நீலாவும் அவர்கள் மூளையில் ஏதொ பொறி தட்டியது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பின் குறிப்பு:
“டேய் குமாரு, ரெண்டுமாசமா நீலாக்கா வீட்ல மளிகை பாக்கி. அடுத்த மாசம் சாமான் போடும்போது சேர்த்து வாங்கிடு”
குடி நீர் குழாயும், சாலை சீரமைப்பும் பேனா செய்த மாயமா அல்லது தேர்தல் நெருங்கியதன் தற்செயலா?
“சார், உங்க அக்கௌன்ட் மட்டும் இல்ல சார். எங்க பேங்க்ல இருக்கிற எல்லா பென்ஷன் அக்கௌன்ட்லயுமே, டெபாசிட் மட்டும் தான் போஸ்ட் ஆயிருக்கு. வித்ட்ராயல் போஸ்ட் ஆகல. நாலு மாசத்துக்கு முன்னாடி, ஜி எஸ் டி வந்தப்போ எங்க பேங்க் சாஃப்ட்வர் மாத்தினதுல ஏதொ கோளாறு ஆகிட்டு. இன்னும் ஒரு வாரத்துல சரியாகிடும்னு ஹெட் ஆபீஸ்ல சொல்லியிருக்காங்க” என்று வங்கிக் கிளை மேலாளர் ஒரு வாடிக்கையாளரிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.
ஒரு வேளை ரகுநாதன் தன் மனைவியிடம் அந்தப் பேனாவைப் பற்றிய ரகசியத்தைச் சொன்னதால் அது சக்தி இழந்து உருவாக்கிய மாயைகளை உடைத்தெறிகிறதா? இன்னும் ரகுவும் நீலாவும் பேனா மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. எது எப்படியோ, வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் வெற்றியும் பெற்று பொது நலத்துடன் மக்களுக்கு சேவை செய்தால் மகிழ்ச்சி தான்.
~ ப பிரசன்னா
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebrated event that highlights the talents of writers from diverse backgrounds. It serves as a platform for creative expression, encouraging participants to push the boundaries of literary art. The competition showcases a variety of genres, offering readers a rich tapestry of stories and poems that reflect the colorful spectrum of human experience.
We extend our heartfelt thanks to Prasanna P for their enchanting short story, "அதிசயப் பேனா." It is a wonderful addition to the Poetry and Creative Writing Competition 2026. Prasanna's narrative skill and imaginative storytelling offer a delightful reading experience. We look forward to seeing more of their creative works in the future.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments