Writer's Block
By Ashik
(Language : Tamil)
பேனாவில் மை தீர்ந்தும் புது வார்த்தை பிறக்கவில்லை
எங்கே சென்றதோ என் கவியூற்று ?
அசை போட சோகமில்லை
துதி பாட காதலில்லை
எதை பாடுமோ என் சொல் ?
தனிமை தாளம் போட
இனிமை இணைந்து பாட
அகத்தின் உள் அகதி ஆனேனோ ?
விதி விழுங்க மதி இன்னும் காலாவதி ஆகவில்லை
போனால் போகட்டும்
இனி எண்ணுவதெல்ல்லாம் எழுதுவேன்
கவி பாட காரணம் தேவையா ?
அன்போடு வாசிக்கின்றாயே நீயோ என் தோழன் இல்லையா ?
Translation :
My pen has run out of ink and no new word has born yet
Where did my poetry fountain go?
No sadness to ruminate
No love to sing praises
What will my word sing?
As my solitude plays its tune,
And harmony joins along
Have I sought refuge within myself?
My mind hasn’t succumbed to the fate of expiry yet
Let it go
I’ll write whatever I feel like writing
Do you need a reason to sing poetry?
You are reading with love, aren’t you my friend?
By Ashik

Comments