What Does She Want?
By Deepthi Hashini S
5. தெரிவையின் தேவை
உழல் படர் ஊழல் உழவு கொன்று
உடல் வளர்க்கிறது..
கண்ணாடி பேழைக்குள் கணினி கொண்டு
விலங்கிட்ட கைதிகள் அநேகம்..
மண் விளைச்சலும் மன உளைச்சலும்
பொல்லா போட்டி போட்டுக் கொண்டு
மனிதம் அழிக்கின்றது
பயங்கரவாத சந்தைகளில்..
ஓங்கும் பங்கு முதல் ஓலை நுங்கு வரை
நுணுப்பான்களில் பதிவிறக்கம்...
உரிமைக்கான கூக்குரலில்
ஊழல் குளிர் காய்கிறது..
அணு ஆயுதமாம் பணம் கொண்டு
கனவுகள் களவாடப்படுகின்றன..
ஏர் ஆழம் காணா மனம் ஏராளம்.
ஏழை படிகள் ஏற
பணம் மனம் இரங்க மறுக்கின்றது.
மனிதம் தனில் நின்று
நீ(னி) விலகி மதம் வியாபித்துஇருக்கின்றது
முற்றும்
ஏகமாற்றமாக ஏமாற்றமற்றதே
தேவை என்கிறாள்
இத்தெரிவை.
Translation
5. What does she want?
The omnipresent corruption is building its kingdom by humiliating the farm life
Several people are handcuffed and imprisoned in front of the computers hidden inside the glass premises
The yield from soil cultivation and the stress of the world is competing among themselves to destroy the manhood in the market of terrorism.
The bullish stocks and from A to Z could be downloaded from anywhere via mobile phones.
The corruption is celebrating the vacation by exploiting the voice of human rights.
Money became the modern atom bomb that destroys the dreams of many.
No heart knows the depth and feel of the farmer’s input to the world
Money is not ready to enter into the downtrodden’s life in order to uplift their lives
The world has lost the humane by uplifting the religions and other barriers.
Wholly, this woman warrior needs a change at once for all sans disappointing.
By Deepthi Hashini S

Comments