Situation
By Dinesh E
என்ன சூழலில் நான் இருக்கின்றேன்
நெஞ்சை வருடிய நினைவுகள் தந்த
புன்னகை பூக்கும் அகம் புறம்
கொண்ட தோழர்கள் நினைவு தந்த
இன்பம் என்றும் என்னைச் சுற்றி
திங்கள் பின் வரும் ஞாயிறென
என்றும் நினைத்து நெஞ்சம் அசைபோட
அந்நேரமே - அருகில் இருக்கும் அன்பர்களின்
முன் சிரித்து பின் முறைத்து
பொய்யும் புரட்டும் பொதுவாய் பேசுவோர்
தரும் வலியும் வேதனையும் இங்கே
ஞாயிறு பின் வரும் திங்களென
மறக்க நினைத்தாலும் நினைக்க மறக்காத
வேதனையை என் சொல்லி தீர்ப்பேன்
English Version: - Situation
What context am I in
Heart-wrenching memories
The inner side of the smile blooms
Reminiscent of comrades with
Pleasure is always around me, like- thee
Sunday is followed after Monday
Do not shake your heart thinking that
At the same time - of loved ones nearby
Laughing in front and then staring
Lying and flipping general speakers
The pain and agony of giving is here like- thee
Monday is followed by Sunday
Don't forget to think even if you want to forget
I will judge the pain by my telling
By Dinesh E

Comments