One Side Love
By Dinesh E
கலைக்க முடியாத கனவு
காவியம் கடந்த உணர்வு
வலியினை தராத எதிர்பார்ப்பு
வாழ்நாள் முழுதும் பூரிப்பு
பிரபலங்களின் மேலும் வரலாம்
ஏன் பிறர்
பாலத்தின் மேலும் வரலாம்
எதிர் வீட்டு பெண் மேலும் வரலாம்
எதிரி நாட்டு பண் மேலும் வரலாம்
தேவை என்று தெரிந்தும்
தேடாமல் இருப்பதிலும் இன்பம்
தொலைவிலேயே என்றும் தொடர்வோம்
சிந்தையால் மட்டுமே தொடுவோம்
கூடி பேசினால் கூடவோ குறையவோ
செய்யலாம் விருப்பம்
ஏனோ கொஞ்சமும் மாறாத நேசம்
மட்டுமே போதும்
புரிந்து கொள்ள துணிந்து பிரிய நேர்ந்து
இருத்தலை கொல்லி எறும்பாய்
துடிப்பது சுமையானதே
புரியாத புதிராய் என்றும் நேசம் குறையாத
இந்த ஒரு தலை காதல் சுகமானதே
English Version: - One side Love
An unbreakable dream
The last feeling of the epic
The expectation does not lead to the pain
Boom for a lifetime, IT –
May come over Celebrities
May come over the strength of others
May come over the neighbour
May come over the Enemy
Knowing that is needed
Pleasure in not looking
We will continue to be far away
Let’s touch only by thought
The option to do more or less, when we talk together
Something a little unchanging love is enough
Dare to understand and happen to break up
It is burdensome to feel like the Ants to death
Incomprehensible mystery is never less than
This one-sided Love is blissful
By Dinesh E

Comments