top of page

Money

Dec 6, 2022
2 min read

Updated: Dec 7, 2022

By M Santhosh Kumar





பணம்… ஒரு மன புரட்சி…

600 கி.மு. வில் சிங்கமுகம் பொறிக்கப்பட்டு துவங்கிய மன புரட்சியே…

எல்லா மதத்தினரும் போற்றுகிற மதமே…

பல வண்ணங்கள், பல சின்னங்கள், பல மனிதர்களின் முகங்கள், பல கையொப்பங்களை உள்ளடக்கிய, மனித உயிரினத்தின் பன் மடங்குள்ள ஜீவனே….

மனிதர்கள் போல் வேறுபாடுகள்; மதிப்பு என்ற பெயரால் கொண்டவையே…

பரிமாற்றம், நம்பிக்கை என இரண்டினையும் அடிநாதமாக கொண்ட உலகளாவிய ஊடகமே…

பொறியியலை பொரியலாகவும், ஏன் காமத்தை கூட இரட்சிப்பாகவும் பரிமாற்றக்கூடிய அபூர்வ சக்தி கொண்டவையே...

பரஸ்பர நம்பிக்கை மேல் எழுப்பப்பட்ட பகிர்வு கற்பனையே…

சக மனிதரின் மேல் நம்பிக்கை விட உன் மீது நம்பிக்கை முதலீடு செய்யும் அளவிற்கு நன்மதிப்பு கொண்டவையே...

மதம், இனம், மொழி இவற்றை அப்பாற்பட்டு நம்மை இணைத்தாலும், உலகத்தை இதயமும், ஈரமும் அற்ற சந்தையாக மாற்றக்கூடிய அபாயகரமான ஆயுதமும் நீயே..

மனித நேயத்தின் அடித்தளமாகிய காதலைக் கூட ஈர்க்கக்கூடிய காந்தமே…

பணமதிப்பிழப்பும், உயிரிழப்பும் ஒன்றோ?; என தோன்ற வைக்கும் நம் கற்பனைத்திறனின் உச்சமே…

நம் கற்பனையிலும் கணினி சர்வரிலும் மட்டும் வாழ்கிற ஒன்றுக்கு உருவம் கொடுத்து, நம்பிக்கை வைத்து, உயிர் கொடுத்து, ஒரு உயிரினமாக்கிய நம் அனைவருக்கும், நம் கற்பனைத்திறனுக்கும் இப் ‘பணம்’ சமர்ப்’பணம்’.





Translation:


MONEY


Money... A mental revolution that started during 600 BC, with the lion face engraved on it...

A religion that is admired by all religions...

The multifaceted soul, consisting of many colors, many symbols, many human faces, many signatures….

Differences like humans; In the name of value...

A global medium based on both exchange and trust...

With rare power to exchange engineering for fries and even, lust for salvation...

A shared fantasy built on mutual trust…

Looking virtuous to invest trust in you than in fellow beings...

Dangerous weapon that unites us beyond religion, caste and language, but can turn the world into a heartless and soulless market.

A magnet that can attract even love, the foundation of humanity...

Is Depreciation and Death the same? The heights of our imagination make it seem like…

This 'Money' is a tribute to all of us, to our imaginations, for giving shape, faith and life to something that lives only in our imaginations and computer servers.


By M Santhosh Kumar






Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page