Ezhuchiyilla Ezhuthaalan
By Sarathkumar Rajendiran
யார் எழுத்தாளன்..?
எழுத்தில் கவர்ச்சியும்
எண்ணத்தில் மகிழ்ச்சியும் கொண்டவனா..?
இல்லை…
உண்மை என்ற உலகத்தில்
உறைந்து கிடந்த நிகழ்வுகளை
வெண்காகிதாத்தால் வெளிச்சத்திற்கு
காட்டுபாவனா…?
நீங்களே சொல்லுங்கள்..
வார்த்தைகளை வாடகை வாங்கி
வர்ணனை சேர்த்து வஞ்சியின் அழகினை
கொஞ்சும் தமிழினால் மாலையென கோர்த்து
கோதை நெஞ்சம்தனை
கொள்ளைக்கொள்ளும்
கள்வர்கள் சிலர் எனில்..!
கரைப்பட்ட சமூகத்தை கண் எதிரே பார்த்து
கலங்கிய உள்ளத்தினால் உண்மை பேசினும்
வறுமையின் பிடியால் தன்
பெறுமை இழந்து
வார்த்தைகள் விற்றவர்கள் பலர்…!
அதனால் தான் என்னவோ…. இன்று
சி றைக்குள் நீதி….!
By Sarathkumar Rajendiran

Comments