Best Friend
By Dinesh E
கவிதை எனும் பேரரசி வரவுக்காக
காத்திருந்தேன் கோல் பிடித்து
என்னுள் இருந்த கவிஞனை கலைஞனை
வெளிகொணர்ந்தாய் திறவுகோல் பிடித்து
பட்டம் மூன்றாண்டு முடியும் வரைதான்
இந்த தொடர்பு என்றுருந்தேன்
பச்சை மூங்கிலில் பயணம் வரையில்
இந்த நட்பு என்றுணர்ந்தேன்
என் கண்களோ கல்லிட்ட குளம் போல்
நான் உருக நண்பர்கள் பெரும்பாண்மை
ஆறடி எழும் ஆழீ பேறலை போல்
நான் அழ இருக்கும் நண்பர்களில்
நீயே முதன்மை
முத்துப்போல் உந்தன் பல் வரிசை சிரக்க
அதில் வெளிப்படும் சிரிப்பில் பார்ப்பவர் கிறங்க
அதன் சிறையில் வெளிவர வார்த்தையும் மறுக்க
அந்த வெள்ளந்தி பார்வையில் எங்கள் கவலை மறக்க
நாம் திறிந்த நாட்களில்
என் விருப்பத்திற்கு என்றும் நீ
மறுப்பு தெரிவித்ததில்லை
எனினும் ஒருபோதும் உன் விருப்பத்தை
என்மேல் தினித்ததில்லை
என் துவிசக்கர வண்டியில் கண்ணன் நீயே
இந்த துறியனின் நேசமிகு கர்ணனும் நீயே
நண்பர்களால் என் தாயிக்கு பெறாத
பிள்ளைகள் தான் ஏராளம்
ஆயினும் நீ என்றால் அவள் இல்லத்திலும் சரி
இதயத்திலும் சரி கொஞ்சம் தாராளமே
நாம் ஆட்டம் போட்டு ஆனந்தமாய் திறிய பொதும் இப்புவி
ஆனால் நம் நட்பை போற்றி பாடிட போதாதே இக்கவி..!!!
English Version: - For a Friend
I awaited to write the poem for you, holding my holy pen
Though you the one who unleased the poet in me
I was in a thought that we will be in touch till we graduate
I realized now that our friendship will last life long
I have lot of friends to share my sorrows
however, I have few friends to
Whom I can cry without shy
In that list you are the first
Your brightening teeth are your attractive strength
When the smile blossoms, it will mesmerize others
Cause of your lovely smile at times words will
stammer to release
Your charming face will make us forgot our sorrows
When we were together
you always respect my thoughts
Though you never tried to impose yours in me
Like lord KRISHNA for Arjuna you ride for me always
If am Duryodhana then you always my Karana
My mother treats all my friends as her daughters and sons
But you will be having special place in her hut also in her heart always
This world is enough for us to enjoy this life
Though this poem is not enough for me,
to cherish our friendship...!!!!
By Dinesh E

Comments