தேடல்
By Jeevitha S (ஜீவந்த் )
உனக்குள்ளே
ஒரு விதை உண்டு
அதை தேடு !
அதற்கான
தேவை அறிந்தே
உரம் போடு !
உன் முயற்சியை
நீராய் ஊற்ற
துளிர் விடும் பாரு !
உன் உழைப்பை
ஒளியாய் கொட்ட
முளைக்கட்டி பெருகும் சேரு !
அசையாத நம்பிக்கையை
உயிரோட்டமாய் நீ
சுவாசித்து பொறுத்திரு !
எட்டாத உயரத்திற்கே
விருட்சமாக வளர்ந்து
உன்னையும் உயர்த்தும்
அந்த விதை ஒரு நாள் !
உனக்குள்ளே
ஒரு விதை உண்டு
அதை தேடு !!
By Jeevitha S (ஜீவந்த் )

Comments