மை
Updated: Dec 7, 2022
By M Santhosh Kumar
கடல்துளி போல் ஓயாத கருமை;
வானளாவிய உயரம் கொண்ட வெண்மை;
இரண்டும் உள்ளடக்கிய இருமை;
திடம் அற்ற திண்மை....
இறுமாப்பு இருந்தும் இல்லாமை;
தாண்டவமாடும் கூட்டத்திலும் தனிமை;
காயங்கள் கடந்தும் கன்னிமை;
புலன்கள் தாண்டிய பழமை...
உணர வேண்டி விழித்திருக்கும் உண்மை…
Translation:
Darkness unceasing like a drop of sea;
Sky-high whiteness;
A duality that comprises both;
Solid without solidity….
Absence even in the presence of arrogance;
Loneliness in a bustling crowd;
Virginity after enduring wounds;
Antiquity beyond the senses...
Truth waits to be awakened…
By M Santhosh Kumar

Comments