- hashtagkalakar
“நீ”
By K.G.Dhanush
வள்ளுவன் எழுத மறந்த “அதிகாரம்” நீ!!
கம்பன் வீட்டு கட்டுத்தறி கவிபாட மறந்த “கவிதை” நீ!!
பத்துப்பாட்டில் பாடாத
“பாடல்” நீ!!
எட்டுத்தொகையில் வட்டியுடன் சேர்க்க வேண்டிய “ தொகை” நீ!!
சித்தன்னவாசலில் வரைய மறந்த “சித்திரம்” நீ!!
பல்லவன் செதுக்க மறந்த “சிற்பம்” நீ!!
சோழன் கட்ட மறந்த
“கோவில்” நீ!!
பாண்டியன் சங்கம் வைத்து வளர்க்க மறந்த “தமிழ்” நீ!!
இராவணன் கற்க மறந்த
“கலை” நீ!!
எடிசன் திருட மறந்த “கண்டுபிடிப்பு” நீ!!
ஹிட்லர் கைப்பற்ற மறந்த
“காதல்தேசம்” நீ!!
சாப்ளின் செய்ய மறந்த
“நகைச்சுவை” நீ!!
அரிதாக ஆட்சியாளர்கள் பேசும்
“உண்மை” நீ!!
நான் என் நண்பனிடம் “முரட்டு சிங்கிள்” என்று சொல்லும் “பொய்யும்” நீ!!
எல்லாமும் நீ!! என்(னாளும்) நீ!!
By K.G.Dhanush