- hashtagkalakar
பெண்
By R.Subalakshmi
உதிரத்தில் உறைந்தபடி வெளியே வந்தாள்
தன்கண் சிவக்க, தாயை புன்முறுக வைத்தாள்,
தன் தாய்க்கு சேய்யாகி, தன் அழகு செயல்களால்
தாயை தன் சேய் ஆக்கினாள், அழுகைகளுடன்
தன் இருக் கருவிழிகளில் அன்பை புதைத்து வைத்து
உலகத்தின் எல்லையைப் பார்த்து வியக்க வந்தாள்,
தன் அறிவுத்திறனால் இலட்சியத்தின் உயரத்தை எட்ட
முயற்சி செய்தாள் ஆவலுடன், அவ்வப்போது
மாதவம் அடைந்து, அதே உதிரம் அவளின் மனதை
உருக்குலைத்தது , மற்றவர்களின் பேச்சால்
இருப்பினும், அவள் உதிரத்தில் உறையாமல் தன் கனவுச்
சிறகை விரித்து உச்சத்தை அடைய முயற்சித்தாள்,
பல கஷ்டங்களை, இஷ்டங்களாய் மாற்றி உழைப்பினால்
தன் கனவுகளின், நினைவுகளை நிஜமாக்கினாள்.
தன் அன்பினால் கைக்கோர்த்து துணைக்கு துணையாகி
தன் தாய்மையை அடைந்தாள் புன்னகையுடன், பின்
பாசப்போராட்டத்தோடு,கனவுப்போராட்டத்தையும்
எதிர்கொண்டு ஓடினால் நம்பிக்கையுடன்,
பல முற்றுப்புள்ளிகளை,தொடர்புள்ளிகளாய் மாற்றி
தன் வாழ்க்கையின் வெற்றி மகுடத்தை சூடினாள்.....
By R.Subalakshmi